விஜய், யுவன்ஷங்கரை விமர்சித்தாரா?..பாவம் பிரதீப் ரங்கநாதன்..பழைய பதிவுகளை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

பதவி வரும்போதும், புகழ் வரும் பொழுதும் கூடவே தொல்லையும் சேர்ந்தே வரும். அது லவ் டுடே இயக்குநர் வாழ்வில் உண்மை ஆகி உள்ளது.

கோமாளி படம் மூலம் புகழ்பெற்று 'லவ் டுடே' படம் மூலம் பேசப்படுபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.

இவர் விஜய், யுவன்ஷங்கர் ராஜாவை விமர்சித்ததாக கூறி பழைய பதிவுகளை எடுத்து போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 வித்தியாசமான கதைகளை சொன்ன இயக்குநர்

வித்தியாசமான கதைகளை சொன்ன இயக்குநர்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை சொல்லிய இயக்குநர்கள் எப்பொழுதும் திரும்பி பார்க்க வைக்கப்படுகிறார்கள். ஒரு 16 வயதினிலே, ஒரு புதிய பாதை போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குநர்கள் பல ஆண்டுகள் திரையுலகில் நீடிக்க முடிந்தது. அதேபோல் கோமாவில் இருந்த ஒருவனை பற்றிய கதையான கோமாளி படம் வித்தியாசமான கதை அமைப்புகள் தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. பள்ளி பருவத்தில் தலையில் அடிபட்டதால் கோமா ஸ்டேஜுக்கு சென்ற நாயகன் 16 ஆண்டுகள் கழித்து கண் விழித்து பார்க்கும் போது உலகமே மாறி இருக்கும். அவர் புதிய உலக வாழ்க்கையுடன் ஒட்ட முடியாமல் தவிப்பதை அழகாக படமாக்கி இருப்பார் பிரதீப் ரங்கநாதன்.

 லவ்டுடே இயக்குநருக்கு கிடைக்கும் பாராட்டு

லவ்டுடே இயக்குநருக்கு கிடைக்கும் பாராட்டு

பிரதீப் ரங்கநாதனின் கோமாளி வித்தியாசமான கதையால் பலராலும் பாராட்டப்பட்டது. அதன் பின்னர் அவர் 'லவ் டுடே' என்கிற படத்தை சமீபத்தில் இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் காதலை, உறவுகளை மிக வித்தியாசமாக பிரதீப் ரங்கநாதன் பதிவு செய்திருப்பதால் இந்த படம் பலராலும் பாராட்டப்படுகிறது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து இயக்குநரை அழைத்து பாராட்டி உள்ளார். பலரும் இயக்குநர் பிரதீப்பை பாராட்டி வருகின்றனர்.

 பிரதீப்புக்கு வந்துள்ள புது பிரச்சினை

பிரதீப்புக்கு வந்துள்ள புது பிரச்சினை

இந்நிலையில் புதிய பிரச்சனை ஒன்று பிரதீப் ரங்கநாதனுக்கு வந்துள்ளது. அவர் தனது சிறுவயதில் ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளத்தில் நடிகர் விஜய் பற்றி போட்ட பதிவுகள், யுவன் சங்கர் ராஜா பற்றி 2010 ஆம் ஆண்டு போட்ட பதிவை எடுத்து மீண்டும் ஷேர் செய்து விமர்சித்து வருகின்றனர். நடிகர் விஜய் வித்தியாசமான மாடுலேஷனில் பேசியதை ஒருவர் பாராட்ட அதை பிரதீப் ரங்கநாதன் விமர்சித்து இருப்பார். அதேபோல் யுவன் சங்கர் ராஜா மோசக்காரர் என்று பதிவிட்டு இருந்தது தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதை எடுத்து போட்டு அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 ரஜினி ரசிகர்கள் கேட்கும் கேள்வி

ரஜினி ரசிகர்கள் கேட்கும் கேள்வி

ஒருபுறம் இப்படி இருக்க கோமாளி படத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என பேசியதை சுட்டிக்காட்டி கோமாலிருந்து மீண்டவர் நான் நம்ப மாட்டேன் ரஜினி அரசியல் பேசுவதை காட்டி காட்சி வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதை ரஜினி ரசிகர்களும் அவருக்கு எதிராக விமர்சனம் செய்தனர் ஆனால் ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டியதை சுட்டிக்காட்டி தலைவருடைய மனசைப் பார்த்துக் கொள் இப்போது புரிந்து கொள் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த மனநிலையை வைத்து விமர்சிக்கலாமா?

10 ஆண்டுகளுக்கு முன் இருந்த மனநிலையை வைத்து விமர்சிக்கலாமா?

இவற்றுக்கெல்லாம் இதுவரை பிரதீப் ரங்கநாதன் வாயை திறக்கவில்லை. திரையுலகில் புகழின் உச்சியில் ஏறிக் கொண்டிருக்கும் நேரத்தில் வேண்டுமென்றே சிலர் இதுபோன்ற பதிவுகளை எடுத்து போட்டு அவரை விமர்சிக்கின்றனர். தற்போது அவர் 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். 12 வருடங்களுக்கு முன்னால் அவருக்கு 16, 17 வயது இருந்திருக்கும். அந்த வயதில் அவர் போட்ட பதிவுகளை எடுத்து வைத்து இப்பொழுது அவரது மனநிலையை ஒப்பிட்டு விமர்சிப்பது மிக தவறான ஒன்று என்றும் நெட்டிசனில் ஒரு பகுதியினர் பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற பதிவுகளை போடுபவர்கள், அவர்களுடைய பத்தாண்டுக்கு முன்னால் பதிவுகளை சற்று திரும்பிப் பாருங்கள் என்றும் எதிர் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.

 வளர்ச்சியை பொறுக்காதவர்கள் செய்யும் வேலை

வளர்ச்சியை பொறுக்காதவர்கள் செய்யும் வேலை

இது ஓரளவு உண்மையும் கூட சிறுவயதில் ஒருவர் பதிவிட்டதற்கும் 10 ஆண்டுகளுக்கும் மேல் கடந்த பின்னர் அவருடைய மன நிலையில் மெச்சூரிட்டி வந்துள்ள நிலையில், சிறுவயதில் பதிவிட்டதை வைத்து அவரை கணக்கிடுவது மிக தவறான ஒன்று. வேண்டுமென்றே பிரதீப் ரங்கநாதன் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று திரையுலகில் பலமான பேச்சு வருகிறது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்காமல் தன்னுடைய அடுத்த படைப்பில் பிரதீப் கவனம் செலுத்தினால் அதுவே விமர்சகர்களுக்கு பதிலாக அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X