சன் பிக்சர்ஸ் சொன்ன வேற மாறி ஆட்டம் இதுதானா...பீஸ்ட் FDFS,ரன்னிங் டைம் தெரியுமா?
சென்னை : பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ எப்போது ரிலீசாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்டு ரசிகர்கள் சந்தோஷமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மற்றொரு முக்கியமான படம் பீஸ்ட் ஆகும். அதுவும் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு வெளி வர உள்ள முதல் விஜய் படம் என்பதால் கொண்டாட்டம் வேற லெவலில் உள்ளது.

சாதனை படைக்கும் பீஸ்ட்
பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் அனைத்தும் வேற லெவலில் ஹிட்டாகி சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் வலிமை படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை பீஸ்ட் முறியடிக்குமா, பீஸ்ட்-கேஜிஎஃப் 2 எந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் என்பது போன்ற விஷயங்கள் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

நாங்களும் காத்திருக்கோம் நண்பா
பீஸ்ட் படத்தின் டிரைலர் ஏப்ரல் 2 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்துள்ளது. பீஸ்ட் டிரைலருக்கு ரசிகர்களை போலவே தாங்களும் காத்திருக்கோம் நண்பா என இன்று மற்றொரு ட்வீட் போட்டுள்ளது. இதனால் ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பீஸ்ட் ரன்னிங் டைம்
பீஸ்ட் ரிலீசாக இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் படம் பற்றிய புதிய தகவல்கள் பலவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பீஸ்ட் படத்திற்கு ஏற்கனவே யு/ஏ சான்று வழங்கப்பட்டு விட்டது. இதன் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 35 நிமிடங்களாம். அரபிக்குத்து பாடல் படத்தின் முடிவில் இடம்பெறுவதாக சொல்லப்பட்டது. தற்போது அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா தவிர மூன்றாவதாக ஒரு பாடல் உள்ளது. அது தான் படத்தின் க்ளைமாக்சில் இடம்பெற உள்ளது என சொல்லப்படுகிறது.

பீஸ்ட் FDFS எப்போ
இந்நிலையில் அமெரிக்காவில் பீஸ்ட் டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகி விட்டதாம். அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோ அல்லது ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ஏப்ரல் 12 ம் தேதி மாலை 3.30 மணிக்கு திரையிடப்பட உள்ளதாம். இந்தியாவில் ஏப்ரல் 13 ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு பீஸ்ட் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ திரையிடப்பட உள்ளதாம். இதைக் கேட்ட ரசிகர்கள் தமிழகத்தில் நள்ளிரவு 1 மணிக்கு படம் ரிலீஸ் சாத்தியமா என சந்தேகமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதான் சன் பிக்சர்ஸ் சொன்னதா
அஜித் நடித்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அதிகாலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அதிகாலை 5.30 மணிக்கு திரையிடப்பட்டது. ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சும் விதமாக பீஸ்ட் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதால் நேற்று டிரைலர் அறிவிப்பின் போது, நம்ம ஆட்டம் இனி வேற மாறி இருக்கும் என சன் பிக்சர்ஸ் சொன்னதை இதை தானோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











