Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..செங்கோட்டையன் தலைமையில் 106 பேர்.. பெரும்படையை களமிறக்கும் இபிஎஸ்
- Sports
"சூர்யகுமார் இல்லாமல் இனி இந்திய அணி இல்லை" ரெய்னாவின் புகழ்ச்சி வார்த்தைகள்.. ரசிகர்கள் வியப்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Finance
தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000-ஐ தாண்டியது.. இனி சாமானியர்கள் வாங்குவது கடினம் தான்..!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடுத்தடுத்து இரண்டு ரிலீசுக்காக காத்திருக்கும் இயக்குனர் அட்லீ.. என்னன்னு தெரியுமா?
சென்னை : இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான முதல் படம் ராஜா ராணி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், அடுத்தடுத்து விஜய்யின் மூன்று பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி இந்திய அளவில் முன்னணி இயக்குநராக மாறியுள்ளார்.
இவரது இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்கள் விஜய் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் வரிசையில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் படங்களின் வெற்றி இவருக்கு பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. ஷாருக்கானின் ஜவான் படத்தை தற்போது இயக்கி வருகிறார் அட்லீ.
அட்லீ
வீட்டில்
நடந்த
வாரிசு
ஃபங்ஷன்...
சர்ப்ரைஸ்
கொடுக்க
முதல்
ஆளாக
சென்ற
விஜய்!

இயக்குநர் அட்லீ
இயக்குநர் அட்லீ இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநர் என்ற பெருமையுடன் வலம் வருகிறார். இவருடைய முதல் படமான ராஜா ராணி, ஆர்யா -நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பு அட்லீயின் வீடு தேடி வந்தது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் அட்லீ. தொடர்ந்து விஜய்யின் மூன்று படங்களை இயக்கி மூன்றையும் ஹிட்டாக்கினார். பிகில், மெர்சல் மற்றும் தெறி என விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார்.

அடுத்தடுத்த வெற்றிகள்
அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படங்கள் விஜய் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பிகில் படத்தில் தந்தை கேரக்டரில் விஜய் நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படத்தின் பாதிப்பு தற்போது தளபதி 67 படத்திலும் எதிரொலிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு ராயப்பன் என்ற அந்த கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.

விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றி
விஜய்யுடன் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தப் படத்தில் ஷாருக்கிற்கு இரட்டை வேடங்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்துள்ளார் நடிகை நயன்தாரா. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி
ஜவான்
படத்தின்
சூட்டிங்
நிறைவடைந்து
தற்போது
போஸ்ட்
புரொடக்ஷன்ஸ்
பணிகள்
நடைபெற்று
வருகின்றன.
இதனிடையே
தன்னுடைய
மனைவி
பிரியா
கர்ப்பமாக
இருக்கும்
மகிழ்ச்சியான
செய்தியை
சமீபத்தில்
சமூக
வலைதளங்களில்
பதிவிட்டிருந்தார்
அட்லீ.
இந்நிலையில்
ரசிகர்களுக்கு
இரட்டை
மகிழ்ச்சியை
அளிக்கும்வகையில்
தன்னுடைய
ஜவான்
படத்தின்
ரிலீஸ்
தேதியையும்
தன்னடைய
ட்விட்டர்
பக்கத்தில்
அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்த ரிலீஸ்
ஜவான் படம் வரும் ஜூன் 2ம் தேதி வெளியாகவுள்ளதாக அவர் தற்போது அறிவித்துள்ளார். தன்னுடைய குழந்தை பிறப்பை பிப்ரவரி மாதத்தில் எதிர்நோக்கியுள்ளதாகவும் ஜவான் ஜூன் 2ம் தேதி ரிலீசாகவுள்ளதாகவும் அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அட்லீ மற்றும் பிரியா இருவரும் சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக காணப்படுகின்றனர். இவர்களின் ரொமான்ஸ் புகைப்படங்கள் அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகின்றன.