முதலமைச்சரை அங்கிள்னு விஜய் சொன்னது தப்பில்லை.. கே.எஸ்.ரவிக்குமார் எல்லாம் தெரிந்துதான் பேசறாரா?

சென்னை: நடிகர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய பேச்சுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை பலரும் கூறி வருகிறார்கள். குறிப்பாக அவர் முதலமைச்சர் ஸ்டாலினை ' அங்கிள்' என்று குறிப்பிட்டது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் கருத்துக்கு இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் சொல்லி உள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது விஜய் பேசியதில் தவறு இருப்பதாக தனக்குத் தோன்றவில்லை என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய் பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான், விஜய் முதலமைச்சரைப் பார்த்து அங்கிள் என்று கூறியதில் தவறு ஏதும் இல்லை. அங்கிள் என்பது எதுவும் மரியாதைக் குறைவான வார்த்தை இல்லையே என்று கேட்டிருந்தார். அதேபோல் நடிகர் எஸ்.வி. சேகர் கூறுகையில், பிரதமரை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே என்று குறிப்பிட்டுவிட்டு முதலமைச்சரை அங்கிள் என்று குறிப்பிட்டுள்ளார். நானும் விஜய்யை அன்போடு அங்கிள் என்று கூப்பிடலாம் என்று இருக்கிறேன் என்று கூறினார். அதற்கு எஸ்.வி. சேகரை பேட்டி எடுத்த பத்திரிகையாளர் முக்தார், நான் விஜய்யை மாமா என்று தமிழில் கூறுவேன். என்று கூறினார்.

Director KS Ravikumar Supports Vijay calls Uncle as Tamilnadu CM Stalin Issue
Photo Credit:

கே.எஸ். ரவிக்குமார்: விஜய்யின் பேச்சுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். திமுக மட்டும் இல்லாமல், அதிமுக தொடங்கி, பாஜக என அனைத்து கட்சிகளின் தலைவர்களும் விஜய்க்கு கண்டனம், தெரிவித்தார்கள். திமுக எம்.எல்.ஏக்கள் தொடங்கி சில அமைச்சர்களும் விஜய்க்கு கண்டனங்களைத் தெரிவித்தார்கள்.

தவறில்லை: இப்படி இருக்கும்போது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஹோட்டல் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய்யின் இந்த பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும் போது விஜய், முதலமைச்சரை நேரில் சந்திக்கும்போது அங்கிள் என்று கூப்பிடுவார். அதனால் அதேபோல் மேடையில் குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன். அப்படிப் பார்த்தால் முதலமைச்சரை அவர் அங்கிள் என்று கூறியது தவறில்லை.

Director KS Ravikumar Supports Vijay calls Uncle as Tamilnadu CM Stalin Issue
Photo Credit:

தமிழில் சொல்லி இருந்தால்: மேலும், மாநாட்டிற்கு வந்தவர்கள் விஜய்யின் ரசிகர்கள்,. அதனால் அவர்களை குஷிப்படுத்த விஜய் இவ்வாறு பேசி இருக்கலாம் என்று நினைக்கின்றேன். மத்தபடி அவர் தமிழில் மாமா என்று கூறி இருந்தால் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகர் விஜய், 'அங்கிள்' என்று கூறியது தவறில்லை என்று சொல்லி உள்ளது தொடர்பாக பலரும் விவாதித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X