twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் அண்ணா படத்தை மிஸ் செய்ய விரும்பவில்லை.. அதனால் சில காம்ப்ரமைஸ் செஞ்சிக்கிட்டேன்.. லோகேஷ் பளீச்

    |

    சென்னை : மாஸ்டர் படத்தில் விஜய்யை இயக்கியிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    வித்தியாசமான கேரக்டரில் குடிகார பேராசிரியராக படத்தில் நடித்திருந்தார் விஜய். மாற்றத்தை எப்போதுமே விரும்பும் விஜய்க்கு இந்தக் கேரக்டர் சிறப்பாக அமைந்தது.

    அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் தனது தளபதி 67 படத்திற்காக இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    நான்காவது காதலருடன் நச்சென லிப் லாக்.. காட்டுத் தீயாய் பரவும் கிம் கர்தாஷியனின் முத்தக் காட்சிகள்!நான்காவது காதலருடன் நச்சென லிப் லாக்.. காட்டுத் தீயாய் பரவும் கிம் கர்தாஷியனின் முத்தக் காட்சிகள்!

    மாஸ்டர் படம்

    மாஸ்டர் படம்

    நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் மாஸ்டர். இந்தப் படத்தில் தன்னுடைய ஸ்டைலில் விஜய்யை மாற்றியிருந்தார் லோகேஷ். இது லோகேஷின் 50 சதவிகிதம் மற்றும் விஜய்யின் 50 சதவிகித படமாக அமைந்தது. இதில் ஹீரோ குடிகார பேராசிரியராகவும் வில்லன் எந்தவிதமான கெட்டப்பழக்கமும் இல்லாமல் இருந்ததும் வித்தியாசமாக இருந்தது.

    குடிகார புரொபசர்

    குடிகார புரொபசர்

    குடிகாரராக இருக்கும் ஹீரோவின் வாழ்க்கையை மாற்றும் இரண்டு சிறுவர்களின் கொலை மற்றும் அதையடுத்து அவர் எவ்வாறு தன்னை வலிமையாக்கிக் கொண்டு செயல்படுகிறார் என்பதாக கதை நகரும். அதையடுத்து படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகரும். படத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    தளபதி 67 படம்

    தளபதி 67 படம்

    இந்நிலையில் அடுத்ததாக விஜய்யுடன் தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைந்து மீண்டும் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    6 மாதத்தில் மாஸ்டர் படம்

    6 மாதத்தில் மாஸ்டர் படம்

    இந்நிலையில் இந்தப் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் சிறப்பான பல தகவல்களை பகிர்ந்துள்ளார். மாஸ்டர் படம் ஒரு முன் முயற்சியாகவே எடுக்கப்பட்டதாகவும் அந்தப் படத்தை இயக்க தனக்கு போதிய அவகாசம் இல்லையென்றும் 6 மாதத்தில் இந்தப் படத்தை எடுத்து முடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டேன்

    காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டேன்

    அதனால் தன்னுடைய 100 சதவிகித படமாக மாஸ்டர் அமையவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் விஜய் அண்ணா படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்ய விரும்பாததும் சில காம்ப்ரமைஸ்களை செய்துக் கொள்ள முக்கியமான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தளபதி 67 சிறப்பாக அமையும்

    தளபதி 67 சிறப்பாக அமையும்

    ஆனால் அடுத்ததாக இயக்கவுள்ள தளபதி 67 படத்தில் போதிய அவகாசம் எடுத்துக் கொண்டு, தன்னுடைய 100 சதவிகித படமாக அதை இயக்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தளபதி 67 படம் மாஸ்டர் படத்தை காட்டிலும் மிகவும் சிறந்ததாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கமலின் விக்ரம் படம்

    கமலின் விக்ரம் படம்

    தற்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ். இந்தப் படம் இன்னும் 3 தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் 100 சதவிகிதம் லோகேஷின் படமாக அமைந்துள்ளதாக கமல், லோகேஷ் இருவரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Lokesh Kanagaraj dont want to compromise in Thalapathy 67 movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X