பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இந்தியன் 2 அப்டேட் கொடுத்த இயக்குநர் ஷங்கர்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோர், ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் இயக்குநர் ஷங்கரும் கலந்துகொண்டார்.

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர், இந்தியன் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் பிரபலங்கள்

பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் பிரபலங்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், அதிதி ராவ் உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களும் பொன்னியின் செல்வன் பிரபலங்களும் மேடையேறி பல சுவாரஸ்யமான விசயங்களைப் பேசினார்கள்.

மேடையேறி பேசிய இயக்குநர் ஷங்கர்

மேடையேறி பேசிய இயக்குநர் ஷங்கர்

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மேடையேறி பேசிய அவர், இயக்குநர் மணிரத்னத்தை வெகுவாகப் பாராட்டினார். மேலும், 'பொன்னியின் செல்வன்' தான் ரியலான பான் இந்தியா திரைப்படம் எனவும் சர்டிபிகேட் கொடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியன் 2 படம் குறித்து சூப்பர் அப்டேட்டை பகிர்ந்துகொண்டார்.

மீண்டும் வேகமெடுக்கும் இந்தியன் 2

மீண்டும் வேகமெடுக்கும் இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பில் எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில், 3 உதவி இயக்குநர் உயிரிழந்ததால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், படத்தின் பட்ஜெட் விசயத்தில், ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்பான லைகாவுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. இந்நிலையில், தற்போது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், இந்தியன் 2 தயாரிப்பில் இணைந்ததை அடுத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது.

ஷூட்டிங் குறித்து சூப்பர் அப்டேட்

ஷூட்டிங் குறித்து சூப்பர் அப்டேட்

கமல், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. அதேநேரம் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 'RC 15' படத்தையும் ஷங்கர் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இதனால், எந்தப் படம் விரைவி;ல் சூட்டிங் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 'பொன்னியின் செல்வன்' மேடையில் பேசிய ஷங்கர், ராகுல் ப்ரீத்தி சிங் நடித்த காட்சிகள் நேற்று தான் படமாக்கப்பட்டதாகவும், அடுத்த கட்ட ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X