Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கேன்சல் ஆகிறதா வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா?: வார்னிங் கொடுத்தது யார்... இதுதான் காரணமா?
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நாளை மாலை சென்னையில் நடைபெறுகிறது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனால் வாரிசு ஆடியோ லான்ச் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வந்த நிலையில், தற்போது முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி இறுதிநேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் - “தி ஆர்டிஸ்ட்”

பிரச்சினை மேல் பிரச்சினை
விஜய்யின் திரைப்படங்கள் பிரச்சினையே இல்லாமல் ரிலீஸானால் தான் அது சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அந்தளவிற்கு கடந்த சில வருடங்களாக விஜய்யின் படங்கள் பல சிக்கல்களில் சிக்கி வருகின்றன. பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகே விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில் வாரிசும் முதலில் பிரச்சினையில் சிக்கியது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஆனால், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

சிக்கலில் இசை வெளியீட்டு விழா
அதன்பின்னர் தெலுங்கு திரையுலகில் விஜய்யின் வாரிசு படத்துக்கு எதிராக இருந்த பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட்டன. இதனையடுத்து சொன்னபடி இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாக்வுள்ளது. மேலும், வாரிசு இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த விழாவில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
அதன்படி வாரிசு இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் தான் இதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிற்து. கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ளதோடு, உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. மேலும், சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் வேகப்படுத்தி வருகின்றன.

கடும் அப்செட்டில் விஜய்
பொதுஇடங்களில் மாஸ்க் கட்டாயம் என பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஏசி அரங்குகள் உட்பட மற்ற இடங்களிலும் மக்கள் அதிகளவில் ஒன்றுகூட வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறவுள்ள வாரிசு இசை வெளியீட்டு விழாவை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. விஜய்யின் படவிழா என்பதால், ரசிகர்கள் அதிகளவில் ஒன்றுகூட வாய்ப்புள்ளது. அப்போது கொரோனா பரவல் ஏற்பட்டால் அது விபரீதமாகிவிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் படக்குழுவினருக்கு எச்சரிக்கை செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வாரிசு இசை வெளியீட்டு விழா சொன்னபடி நடக்குமா என்பதே கேள்விக்குரியாகியுள்ளது. இது விஜய் மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களையும் அப்செட்டாக்கியுள்ளது.