Don't Miss!
- News
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
தளபதி 67 LCU கான்செப்ட் தான்... நானும் நடிக்கலாம்... பத்த வச்ச ஃபஹத்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் அடித்தது.
இந்தப் படத்தில் கமல், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்திருந்தனர்.
இதனையடுத்து இனிமேல் ஹாலிவுட்டை போன்று லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் படங்கள் இயக்குவேன் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படமும் லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் தான் உருவாகி வருவதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
சினிமாவை விட ரசிகர்களுக்கு உசுரு தான் முக்கியம்... எமோஷனலான லோகேஷ் கனகராஜ்

படப்பிடிப்பில் தளபதி 67
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தான் இயக்கிய 4 திரைப்படங்களையும் ஹிட்டாக்கினார் லோகேஷ் கனகராஜ். முக்கியமாக கடந்தாண்டு வெளியான 'விக்ரம்', கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்ட் பிரேக் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் லோகேஷ். தற்காலிகமாக தளபதி 67 என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

முதல் அப்டேட் கொடுத்த மிஷ்கின்
விஜய் ஜோடியாக த்ரிஷாவும், வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தளபதி 67 ஷூட்டிங் சென்னையில் தொடங்கியதை மிஷ்கின் உறுதி செய்தார். சமீபத்தில அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், "இப்போது தான் தளபதி 67 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வருகிறேன். விஜய்யுடன் நடித்த சண்டைக் காட்சியில் அவரிடம் செம்மையாக அடிவாங்கினேன்" என பெருமையாக பேசினார்.

பத்த வச்ச ஃபஹத் பாசில்
இதனைத் தொடர்ந்து தளபதி 67 அடுத்தக்கட்ட ஷூட்டிங் கொடைக்கானலில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பிக் பாஸ் சீசன் 6 பிரபலம் ஜனனியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஃபஹத் பாசில் இன்னொரு மாஸ் அப்டேட் கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். ஃபஹத் பாசில் சொன்னபடி தளபதி 67 லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாவது உறுதியாகியுள்ளது.

கோஸ்ட் ரிட்டர்ன்ஸ்?
மேலும் தளபதி 67 படத்தில் தானும் நடிக்கலாம் என லீட் கொடுத்துள்ளார். லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகும் தளபதி 67, விக்ரம் படத்தின் சீக்வெல்லாக இருக்கும் என்பதால் ஃபஹத் அவ்வாறு கூறியுள்ளார். விக்ரம் படத்தில் அமர் என்ற ஸ்பை கேரக்டரில் நடித்த ஃபஹத், இறுதியாக கமலின் கோஸ்ட் டீமில் இணைவதாக முடிந்திருந்தது. அதனால் அவரும் தளபதி 67 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே இதுகுறித்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஃபஹத் பாசிலே அப்டேட் கொடுத்துள்ளது, தளபதி 67 மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.