Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அன்று போஸ்டருக்கு முன்,இன்று தளபதிக்கு முன்.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை : மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்குவார் என கோலிவுட்டே எதிர்பார்த்திருந்த நிலையில் இப்பொழுது மாஸான அப்டேட் வெளியாகி உள்ளது.
விஜய்யுடன் இணைந்து தொடர் வெற்றிகளை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் 65வது திரைப் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது சர்ப்ரைஸாக கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இயக்குகிறார்.
திடீர் மாரடைப்பு.. பிரபல இசை அமைப்பாளர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி.. ரசிகர்கள் இரங்கல்!
எதையும் வித்தியாசமாக செய்யும் தன்மை கொண்ட நெல்சன் விஜய் 65 திரைப்படத்தை இயக்கும் அறிவிப்பை மாஸான வீடியோ மூலம் அறிவித்திருக்க இந்த வீடியோ இப்பொழுது இணையதளத்தை தெறிக்க விட்டு வர, சில வருடங்களுக்கு முன்பு விஜய் போஸ்டர் முன் நின்று நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வேட்டை மன்னன்
தொடங்கிய முதல் திரைப்படமே கைகூடாமல் போக "வேட்டை மன்னன்" திரைப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, நீண்ட இடைவெளிக்கு பிறகு கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றியும் பெற்றவர் இயக்குனர் நெல்சன்.

நீண்ட கால நண்பரும்
நயன்தாரா இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் யோகி பாபுவின் அசத்தலான காமெடியில் உருவான "கோலமாவு கோகிலா" மிகப்பெரிய வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்த நிலையில் இப்பொழுது நெல்சனின் நீண்ட கால நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து "டாக்டர்" திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இணையதளத்தை கலக்கி
எப்பொழுதும் வித்தியாசமாக யோசிக்கும் நெல்சன் டாக்டர் படத்தின் செல்லம்மா செல்லம்மா பாடல் வெளியீட்டு ப்ரோமோவையும் மிக வித்தியாசமாக காமெடி கலந்த நக்கலுடன் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் உடன் இணைந்து உருவாக்கிய ப்ரோமோ செம ஹிட்டான நிலையில் செல்லமா பாடலும் மாபெரும் வெற்றி பெற்று இணையதளத்தை கலக்கி வருகிறது.

ஆக்ரோசமான நடிப்பை
கைதி திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் முதன்முறையாக ப்ரொஃபஸர் வேடத்தில் நடித்திருக்க மறுமுனையில் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஆக்ரோசமான நடிப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

நெல்சன் இயக்குகிறார்
இவ்வாறு திரையுலகம் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் 65வது திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்பொழுது அதை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹாட் டாப்பிக்காக
ஏற்கனவே சொன்னது போல எதையும் வித்தியாசமாக செய்யும் நெல்சன் விஜய் 65 திரைப்படத்தின் அறிவிப்பையும் கொஞ்சம் வித்தியாசமான முறையில், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், விஜய் மற்றும் நெல்சன் மூவரும் இணைந்து பேசிக் கொண்டு இருக்கின்றவாறு சூப்பர் ப்ரோமோவை வெளியிட்டதைத் தொடர்ந்து இப்பொழுது கோலிவுட்டில் இதுதான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வைரலாகி வருகிறது.

அதே போஸில்
இந்த நிலையில் சிறு வயது முதலே விஜய்யின் தீவிர ரசிகரான நெல்சன் ஆரம்பகாலத்தில் விஜய் நடித்த பட போஸ்டருடன் அதே போஸில் நின்றுகொண்டு எடுத்த புகைப்படம் இப்பொழுது வைரல் ஆகி வர, "அன்று போஸ்டருக்கு முன்.. இன்று தளபதிக்கு முன்" என இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வர, இத்திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பிற நடிகர் நடிகைகளின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.