விஜய்க்கு அசிங்கமே விஜய் ரசிகர்கள்தான்.. கமெண்ட் செக்ஷனில் கதறியவர்களை விளாசிவிட்ட பிரபலம்!
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் தொடர்பாக நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட மொத்தம் 41 பேர் மரணித்துப் போனார்கள். இது மொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ரூபாய் 20 லட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்து கேட்டு வீடியோ வெளியிடப்பட்டது. இதில் அந்த மக்கள் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இந்த வீடியோக்களுக்கு நகைச்சுவை நடிகர் ஜி.பி. முத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதாவது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " இழப்பீடு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் அதை வாங்கிய பின்னர் அதை வெளிப்படுத்தும் விதம் மிகவும் கேவலமாக உள்ளது. ஒருவர் சொல்லுகிறார், எனது இரண்டு குழந்தைகள் செத்தாலும் பரவாயில்லை என்று கூறுகிறார். எனக்கு பதறுகிறது. 20 லட்சம் தான் அவர்களுக்கு பெரிதாக தெரிகிறது, குழந்தையை இழந்த வருத்தம் அவர்களிடத்தில் இல்லை.

பெற்ற பிள்ளையை விட எத்தனை லட்சங்களும் கோடிகளும் வந்தாலும் அது ஈடாகிவிடுமா? தம்பியை இழந்த ஒருவர், விஜய் சாருக்காக எனது தம்பி உயிரைக் கொடுத்துள்ளான், அது தவறு கிடையாது, நானும் உயிரைக் கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த பேச்சுக்களை விஜய் சார் கேட்டால் கூட கண்டிப்பார். ஒரு குடும்பத்தினரே சொல்கிறார்கள், எங்கள் குழந்தை இறந்ததால் தான் நாங்கள் விஜய்யை அருகில் இருந்து பார்த்தோம், பரவாயில்லை என்று சொல்கிறார்கள். இப்படிச் சொல்ல வெட்கமாக இல்லையா?
தரம் கெட்ட பேட்டி: 41 உயிர்கள் போய்விட்டதே என்று வருந்தியவர்கள் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றுவது போல உள்ளது. உங்களுக்கு பணம், காசு தான் பெருசு என்றால், பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதற்காக இவ்வளவு தரம் கெட்ட பேட்டிகளை கொடுக்காதீர்கள். இப்படி பேசுபவர்களை பார்க்கும்போது முகத்திலேயே உமிழ வேண்டும் என்பது போல கோபம் வருகிறது. இவ்வளவு கேவலமான பேட்டிகளை கொடுத்து இறந்தவர்களின் உயிரை கேவலமாக மாற்றாதீர்கள். பணத்தையும் உயிரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள்" என்று காட்டமாக பேசியிருந்தார்.

விஜய் ரசிகர்கள்: ஜி.பி. முத்து இவ்வாறு பேசியதற்கு விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட தவெகவினர் ஜி.பி. முத்து மற்றும் அவரது குடும்பத்தினரை மிகவும் மோசமாக விமர்சித்து கமெண்ட் செக்ஷனில் கமெண்ட் போட்டுள்ளார்கள். இந்நிலையில் இதைக் கண்டித்து, ஜி.பி முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய்க்கு அவப்பெயரே அவரது ரசிகர்களால் தான். நான் என்ன சொல்லி இருந்தேன், பணத்தையும் உயிரையும் ஒன்றாக ஒப்பிடாதீர்கள், என்றுதான் சொல்லி இருந்தேன்.மேலும் பணம் தான் பெரியது என்பது போல பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன்.
விஜய்க்கு கெட்டப் பெயர்: ஆனால் விஜய் ரசிகர்கள் என்னையும் எனது குடும்பத்தையும் அசிங்கமாக திட்டுகிறார்கள். விஜய்க்கு அவமானமும் அசிங்கமும் அவரது ரசிகர்களால் தான் ஏற்படுகிறது. இப்படி எல்லாம் பேசுவதால்தான் அவர்களை பலரும் தற்குறி என்று சொல்லுகிறார்கள்" என்று மிகவும் காட்டமாக பேசி வீடியோ பகிர்ந்துள்ளார். ஜி.பி. முத்து வைக்கும் குற்றச்சாட்டானது, விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மீது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











