புதுமாப்பிள்ளை பரிதாபங்கள் சீக்கிரம் வருமோ.. சுதாகருக்கு திருமணம் ஆகிடுச்சு.. நெக்ஸ்ட் கோபி தான்!

சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'பரிதாபங்கள்' சுதாகருக்கு நிச்சயதார்த்தம் ஆன நிலையில், தற்போது அவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

கோபி மற்றும் பரிதாபங்கள் யூடியூப் சேனல் டீம் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோவை பரிதாபங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

பரிதாபங்கள் சுதாகருக்கு திருமணம் ஆன செய்தியை அறிந்த ரசிகர்களும், பிரபலங்களும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

பரிதாபங்கள்

பரிதாபங்கள்

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் பரிதாபங்கள் எனும் தலைப்பில் வீடியோக்களை போட்டு காமெடி இரட்டையர்களாக அசத்தி வந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் இருந்து விலகிய இருவரும் பரிதாபங்கள் என தனியாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து ஏகப்பட்ட காமெடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்கள்.

காமெடி காம்போ

காமெடி காம்போ

பேங்க் பரிதாபங்கள் தொடங்கி கொரோனா பரிதாபங்கள் வரை ஏகப்பட்ட பரிதாப வீடியோக்களை போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர். இவர்களின் வீடியோக்கள் வெளியான உடனே மில்லியன் கணக்கில் வியூக்களை அள்ளி யூடியூபில் டிரெண்டாகி விடும். சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் கோபி மற்றும் சுதாகருக்கு உள்ளனர்.

மணி கம் டுடே கோ டுமாரோ

மணி கம் டுடே கோ டுமாரோ

யூடியூப் பிரபலங்களும் சினிமாவில் சாதிக்க முடியும் என சினிமா பக்கம் களமிறங்கிய சில பேரில் இவர்களும் முக்கியமானவர்கள். மீசையை முறுக்கு, மெர்சல், ஜோம்பி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளனர். குரூப் ஃபண்டிங் மூலம் சுமார் 6.5 கோடி நிதி திரட்டி "மணி கம் டுடே, கோ டுமாரோ எனும் படத்தை ஆரம்பித்தனர். ஆனால், இன்னமும் அந்த படம் பல்வேறு காரணங்களால் நிறைவு பெறவில்லை. விரைவில் அந்த படம் எடுத்து முடிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

சுதாகர் நிச்சயதார்த்தம்

சுதாகர் நிச்சயதார்த்தம்

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுதாகரின் சொந்த ஊரான சிவகாசியில் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் சூழ கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின. மாப்பிள்ளை சுதாகர் நீல நிற பிளேசர் அணிந்து நிச்சயதார்த்தத்தில் மாலையும் கழுத்துமாக செம வெக்கத்துடன் கொடுத்த போஸ்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

திருமணம் ஆகிடுச்சு

திருமணம் ஆகிடுச்சு

இந்நிலையில், சுபமுகூர்த்த தினமான மார்ச் 13ம் தேதி (இன்று) பரிதாபங்கள் சுதாகர் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் சுதாகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குரூப் போட்டோ

குரூப் போட்டோ

பட்டு வேட்டி சட்டையில், துனியா சுதாகரும், பிங்க் கலர் பட்டு சேலையில் மணப்பெண்ணும், மணப்பெண் அருகே பச்சை நிற பட்டு சட்டை மற்றும் வேட்டி அணிந்து கொண்டு கோபி நிற்க, ஒட்டுமொத்த பரிதாபங்கள் யூடியூப் சேனலும் ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட குரூப் போட்டோவை பரிதாபங்கள் யூடியூப் சேனலின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு சுதாகருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

புதுமாப்பிள்ளை பரிதாபங்கள் வருமா

புதுமாப்பிள்ளை பரிதாபங்கள் வருமா

சுதாகருக்கு திருமணம் ஆனதை அறிந்த ரசிகர்கள், சுதாகரை அவர் யூடியூப் வீடியோவில் பேசிய "பொம்பள சோக்கு கேக்குது" என்கிற வசனத்தை போட்டு கலாய்த்து வருகின்றனர். மேலும், அப்போ சீக்கிரமே புதுமாப்பிள்ளை பரிதாபங்கள் வீடியோ ஒன்று வரும் என பங்கமாக கலாய்த்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோபிக்கு எப்போ

கோபிக்கு எப்போ

சுதாகருக்கு திருமணம் ஆன நிலையில், அடுத்து கோபிக்குத் தான் திருமணம் என்றும், கோபி உங்க மேரேஜ் எப்போ? என்றும் எந்த நடிகையுடன் திருமணம் கோபி என்றும் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு ரசிகர்கள் கோபியை வெட்கப்பட வைத்து வருகின்றனர். கொரோனா பரவல் எல்லாம் குறைந்து விட்ட நிலையில், சீக்கிரமே கோபி சுதாகர் இணைந்து நடிக்கும் படமும் ரெடியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X