»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை ரவளியின் அக்காவான டிவி நடிகை ஹரிதாவுக்கு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி டும்டும்டும் கொட்டப்படுகிறது.

ரவளியைப் போலல்லாது சேலையுடன் டிவி தொடர்களில் நடித்து வருபவர் ஹரிதா. சின்னத் திரை சரோஜா தேவிஎன்ற பெயர் ஹரிதாவுக்கு உண்டு. பெரும்பாலான தொடர்களில் இவர் அழுதுகொண்டேதான் இருப்பார்.

தாய்மொழியான தெலுங்கிலும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார் ஹரிதா. அப்போது இவருக்கும் டிவி நடிகர்ஜானகிராம் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். ஹரிதா, ஜானகிராம் காதலை அவர்களது பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

அப்புறம் என்ன பெரியவர்கள் கூடிப் பேசி முகூர்த்த நாளையும் குறித்து விட்டனர். ஆகஸ்ட் 4ம் தேதிசென்னையில் கல்யாணம் நடக்கவுள்ளது. அதற்கு முதல் நாள் இரவு 7 மணிக்கு வரவேற்பு நடக்கிறது.

கல்யாணத்திற்குப் பிறகும் ஹரிதா அழுவாராம் - டிவி தொடர்களில்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil