வெறித்தனமாக வொர்க்அவுட் செய்த ஐஸ்வர்யா ரஜினி... முகத்துல சூப்பரான புன்னகை!
சென்னை : பிரபல இயக்குநரும் நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, தனது விவாகரத்து முடிவுக்கு பிறகு அதிகமான தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார். தனது மகன்களுடனும் சிறப்பான வகையில் நேரத்தை ஒதுக்கி வருகிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் சிறப்பாக்கி வருகிறார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி. இவர்கள் இருவருடைய திருமண வாழ்க்கையும் 18 ஆண்டுகள் நீடித்தது. இரண்டு மகன்களும் இவர்களுக்கு உள்ள நிலையில் சிறப்பான இந்த வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை இருவரும் இணைந்தே சமீபத்தில் வெளியிட்டனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரிவு
இவர்களின் இந்த விவாகரத்து முடிவு இருவீட்டாருக்கு மட்டுமின்றி திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆயினும் இருவரும் தங்களது கேரியரை நோக்கிய பயணங்களில் தீவிரமாக காணப்படுகின்றனர்.

இசை ஆல்பம் வெளியீடு
தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் மற்றும் இரு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி ஆகிய படங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார். இதேபோல ஐஸ்வர்யா ரஜினியும் தன்னுடைய இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டார். இதையடுத்து பாலிவுட்டில் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

வாழ்க்கையின் கொண்டாட்டங்கள்
இதுமட்டுமின்றி தன்னுடைய வாழ்க்கையின் சிறிய சிறிய கொண்டாட்டங்களை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இதேபோல புத்தக வாசிப்பு, காபியை அனுபவித்துக் குடிப்பது, வொர்க் அவுட் செய்வது என அடுத்தடுத்து செயல்பாடுகளை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

வெறித்தனமான வொர்க் அவுட்
இந்நிலையில் இன்றைய தினம் தான் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஜாக்கிங் உள்ளிட்டவற்றை மிகவும் வேகமாக அவர் செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தகைய வெறித்தனமான வொர்க் அவுட்டிலும் அவரது முகத்தில் புன்னகை தவழ்கிறது.

அதிகரித்துவரும் தன்னம்பிக்கை
அவருடைய தன்னம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை அவர் வெளியிடும் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் தன்னுடைய மகன்களுடன் செல்லம் கொஞ்சும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார். அதிலும் அவரது பாசம் மட்டுமின்றி நம்பிக்கையும் சிறப்பாக வெளிப்பட்டது.


Click it and Unblock the Notifications











