ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்துகிறார்கள்.. இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இப்பொழுது சூர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார்
வாடிவாசல் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அதில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
இந்த நிலையில் ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்துகிறார்கள் என சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் காட்டமாக பேசியுள்ளார்

உண்மைத்தன்மை மாறாத
ராவான கதைகளை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளில் தனக்கே உரித்தான உண்மைத்தன்மை மாறாத பாணியில் கூறிவரும் வெற்றிமாறன் அசுரன் படத்திற்காக தேசிய விருதை வென்றார். அசுரன் படத்தில் தனுஷை முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டிய வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

மதுரையில் வாடிவாசல் படப்பிடிப்பு
ஜெய்பீம், சூரரைப்போற்று,எதற்கும் துணிந்தவன் என தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் படப்பிடிப்பை சமீபத்தில் வெற்றிமாறன் தொடங்கினார் மதுரையில் விறுவிறுப்பாக தொடங்கிய இந்த படப்பிடிப்பில் சூர்யா மற்றும் சூரி இருவரும் கலந்து கொண்டனர் அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின

62வது சர்வதேச திரைப்பட விழா
இந்நிலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 62வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வெற்றிமாறன். ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்துகிறார்கள் என காட்டமாக பேசியுள்ளார். மேலும் அவ்விழாவில் பேசியுள்ளதாவது, என் படத்திற்கு தேவையான உலகத்தை நானே தேர்வு செய்வேன். அந்த உலகத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வேன் பின் அதிலிருந்து கதையை தேடுவேன். ஒரு பகுதியில் கற்க அல்லது புரிந்து கொள்ள வேண்டியது ஏதாவது இருந்தால் அங்கு செல்வேன்.

எந்த பிரச்சனைக்கும் தீர்வு
படங்களை இயக்கும் பொழுது அந்த கதை களத்தை சரியாக காட்டுவது ரொம்ப முக்கியம். கதைக்களம் நடக்கும் பகுதியை சேர்ந்தவரை சிறிய வேடங்களில் நடிக்க வைக்கும் பொழுது அவர்கள் தமக்கே உரித்தான சில விஷயங்களை மாற்றச் சொல்லி பரிந்துரைப்பார்கள். அதை வைத்து கதைக்களத்தை மாற்றுவோம். எனவே அதே பகுதியில் இருக்கும் துணை நடிகர்களை தேர்வு செய்தால் உண்மை தன்மை மாறாமல் இருக்கும். இயக்குனர் எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை. அவர் விஞ்ஞானியும் அல்ல, கணித மேதையும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. அவர் கலைஞர்.


Click it and Unblock the Notifications











