குருதிப்புனல் படம் பார்க்க போனதுக்கு வீட்டில் அடி வாங்கினேன்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர்களுக்கும் அதிகம் பிடித்த இயக்குனராக உள்ளார்

கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது

இந்த நிலையில் சிறுவயதில் குருதிப்புனல் படம் பார்க்க போனதற்கு வீட்டில் அடி வாங்கியது குறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள்

அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள்

வித்தியாசமான மேக்கிங் அதிரடி சண்டைக்காட்சிகள் முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் என ஒவ்வொரு படங்களிலும் மிரட்டி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிற்கு மாநகரம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . எந்த ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணி புரியாமல் குறும்படங்களை இயக்கியதன் மூலம் இப்பொழுது இயக்குனராக மாறியுள்ளார்

இப்போது பாலிவுட்டில் ரீமேக்

இப்போது பாலிவுட்டில் ரீமேக்

மாநகரம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்கிய திரைப்படம் கைதி கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படத்தில் வழக்கமான கமர்ஷியல் மசாலாக்கள் எதுவும் இல்லாமல் ஜனரஞ்சகமான ஆக்சன் திரைப்படமாக வெளியானது ரசிகர்களுக்கு முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுத்த இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது கைதி வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படம் இப்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் இந்த படம் தற்போது உருவாகி வருகிறது

150 கோடி வசூல்

150 கோடி வசூல்

கைதி பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு கௌரி கிஷன், ஆண்ட்ரியா,மாளவிகா மோகனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்க இந்தப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்போது தனது கலையுலக கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கினார் இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது வெளியான மூன்றே நாட்களில் 150 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ள வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

வீட்டில் அடி வாங்கினேன்

வீட்டில் அடி வாங்கினேன்

நடிகர் கமல்ஹாசனை சிறுவயதில் இருந்தே ரசித்து வரும் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் மிக தீவிர ரசிகனாக இருந்து வருகிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும் கமல்ஹாசன் படம் எப்பொழுது வெளியானாலும் அது பார்த்து திரைப்படங்களை எப்படி இயக்குவது என்பதை கற்றுக் கொண்டு வந்த லோகேஷ் கனகராஜ் குருதிப்புனல் வெளியான சமயத்தில் குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக்கொண்டு படத்தி க்கிற்கு சென்று உள்ளார் ஆனால் குடும்பத்தார் நினைத்ததுபோலவே குருதிப்புனல் இல்லாததால் பாதியிலேயே திரும்பி வந்து விட்டார்களாம். குருதிப்புனல் படம் பார்க்க போனதற்காக வீட்டில் அடியும் வாங்கி வாங்கினாராம். இந்த தகவலை தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X