வாரணம் ஆயிரம் படத்தை பார்த்து சிகரெட் பிடிப்பதை விட்ட வாடிவாசல் இயக்குநர்!

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் வாரணம் ஆயிரம்.

சூர்யாவின் சிறப்பான படங்களில் ஒன்றாக இந்த படம் உள்ளது. அவருக்கு ஏற்றத்தை தந்த படம்.

இந்தப் படத்தை தந்தை -மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் சூர்யா நடித்திருந்தார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் சூர்யாவின் பண்பட்ட நடிப்பை பார்க்க முடிந்தது. படத்தில் முதல்முறையாக வழக்கறிஞர் வேடம் ஏற்று நடித்திருந்தார் சூர்யா. பழங்குடியின பெண்ணிற்கு உதவும் கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா

தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். முன்னதாக பாலா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

வெற்றிமாறன் -சூர்யா கூட்டணி

வெற்றிமாறன் -சூர்யா கூட்டணி

தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்துவரும் சூர்யா வெற்றிமாறன் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் மிரட்டலான போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

புகைப்பழக்கத்தை நிறுத்திய வெற்றிமாறன்

புகைப்பழக்கத்தை நிறுத்திய வெற்றிமாறன்

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதற்கு சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம்தான் காரணம் என்ற ரகசியத்தை போட்டுடைத்துள்ளார் வெற்றிமாறன். வாரணம் ஆயிரம் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்து தன்னுடைய கடைசி சிகரெட்டை புகைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

1000 Students Exam எழுதிருக்காங்க Vetrimaaran Pressmeet on Free Film Course | IIFC | Filmibeat Tamil
வாழ்க்கையில் மாற்றம்

வாழ்க்கையில் மாற்றம்

இது நடைபெற்றது நவம்பர் 14 2009 என்றும் அதன்பிறகு சிகரெட்டை தான் தொடவில்லை என்றும் இந்தப் படம் தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாரணம் ஆயிரம் படத்தில் கல்லூரி மாணவராக நடித்து காதல் தோல்வியால் வழிமாறும் சூர்யா, தொடர்ந்து அதிலிருந்து மீண்டும் ராணுவ அதிகாரியாக மாறுவதாக கதை செல்லும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X