»   »  'புலி'யை ஆதரிக்க பாய்ந்தோடி வந்த ரசிகர்கள்.. டிவிட்டரில் உற்சாகம்

'புலி'யை ஆதரிக்க பாய்ந்தோடி வந்த ரசிகர்கள்.. டிவிட்டரில் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று திடீரென்று நடிகர் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு காரணமாக புலி படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இன்று நண்பகல் 12 மணிக்கு மேல் புலி திரைப்படம் வெளியாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். ட்விட்டரில் தற்போது #ISupportPuli என்னும் ஹெஷ்டேக் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.


ரசிகர்களின் ட்வீட்களில் இருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.


நாங்க இருப்போம்

நாங்க இருப்போம்

விஜய் படம் தள்ளிப் போனா அவரது ரசிகர்கள் நாங்க இருப்போம், என்னைக்கும் படம் எப்ப வந்தாலும் ஜெய்க்கிறோம்" என்று நடிகர் விஜய்க்கு தனது ஆதரவை அளித்திருக்கிறார் செல்லத்தளபதி.


அஜீத் ரசிகர்களின் ஆதரவும்

"தல ரசிகர்களான நாம் இந்த மாதிரியான சூழலில் கை கொடுக்கவேண்டும். இன்று புலிக்கு வந்த நிலைமை நாளை நமக்கும் வரலாம்" அதனால் நமது ஆதரவை புலி திரைப்படத்திற்கு கொடுப்போம் என்று கூறியிருக்கிறார் ராம்.


சோதனைகளை கடந்து வந்தால் தான்

"சோதனைகளை கடந்து வந்தால் தான் சாதனைகள் புரிய முடியும். நீ வா தலைவா" என்று தனது ஆதரவை புலி திரைப்படத்திற்கு அளித்திருக்கிறார் சுரேஷ் வைத்தி.


9 மணிக்கு மேல்

காலை 9 மணிக்கு மேல் புலி திரைப்படம் வெளியாகும் என்று தொலைக்காட்சியில் ஓடிய பிளாஷ் நியூசை போட்டு புலி படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார் கோவி.


இதைப் போன்ற மேலும் பலரும் தங்கள் ஆதரவை புலி திரைப்படத்திற்கு அளிப்பதால் தற்போது இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது #isupportpuli.Read more about: vijay, puli, விஜய், புலி
English summary
Vijay's Puli Special Show Cancelled. Now Vijay Fans Support Puli Movie in All Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil