சூர்யாவை பார்த்து ரொம்ப பயந்துட்டேன்...பிரபல நடிகை பகிர்ந்த அனுபவம்

சென்னை : சூர்யாவை முதல் முறையாக பார்த்து ரெம்ப பயந்து விட்டேன் என பிரபல இளம் நடிகை மேடையிலேயே கூறி உள்ளார். இதை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்ட நிலையில், அதற்கான காரணத்தையும், விளக்கத்தையும் அவரே கூறி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியங்கா அருள் மோகன். கன்னட படத்தில் அறிமுகமானாலும், தெலுங்கு மற்றும் தமிழில் டாப் ஹீரோக்களுடன் நடித்து, டாப் ஹீரோயின் என பெயர் வாங்கி வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார் பிரியங்கா.

டாப் ஹீரோக்களுடன் ஜோடி

டாப் ஹீரோக்களுடன் ஜோடி

முதல் படத்திலேயே அழகிய டால் போல் வந்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்தார். இவரின் க்யூட்டான நடிப்பு, அழகான தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டதால் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்திலும் நடிக்க பிரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. டான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று விட்டார் பிரியங்கா அருள் மோகன்.

தியேட்டரில் ரிலீசாகும் சூர்யா படம்

தியேட்டரில் ரிலீசாகும் சூர்யா படம்

பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ளது. கடைசியாக 2019 ல் சூர்யா நடித்த காப்பான் படம் தான் தியேட்டரில் ரிலீசானது. அதற்கு பிறகு அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களுமே ஓடிடி.,யில் தான் ரிலீஸ் செய்யப்பட்டன. இருந்தாலும் இரண்டு படங்களும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, பெரிய அளவில் பேசப்பட்டன. சர்வதேச விருதுகளையும் இந்த படங்கள் பெற்றுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாக போகும் சூர்யா படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மிரட்டலான டிரைலர்

மிரட்டலான டிரைலர்

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது. செம மிரட்டலான இந்த டிரைலரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். டிரைலரே படத்தை இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

Recommended Video

2021-ல் அதிகம் பேசப்பட்ட Suriya, Vijay, Ajith | Jaibhim, Thala Ajith, Rolls Royce
சூர்யாவை பார்த்து பயந்துட்டேன்

சூர்யாவை பார்த்து பயந்துட்டேன்

விழாவில் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி பலரும் பேசினர். அப்போது படத்தின் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் கூறுகையில், சூர்யா சாருடன் முதல் முறையாக நடிக்கும் போது ரொம்ப பயந்தேன். ஆனால் அவர் எனக்கு ஊக்கமளித்து மிகவும் சப்போர்ட்டாக இருந்தார். அவருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழச்சியாக உள்ளது என்றார். தொடர்ந்து சூர்யாவை நடிப்பின் நாயகன் என பிரியங்கா அருள் மோகன் அழைத்தார். சூர்யாவை பற்றி அவர் பேசிய இந்த பேச்சை உடனடியாக ட்விட்டரில் டிரெண்ட் ஆக்கி விட்டனர் சூர்யா ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X