»   »  நீங்க உண்மையான தமிழனா இருந்தா என் படத்தை நெட்டில் போடாதீங்க - ஜெயம் ரவி உருக்கம்: வீடியோ

நீங்க உண்மையான தமிழனா இருந்தா என் படத்தை நெட்டில் போடாதீங்க - ஜெயம் ரவி உருக்கம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உண்மையான தமிழனாக இருந்தால் வனமகன் திரைப்படத்தில் நெட்டில் ஏற்றாதீர்கள் என நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி, சயீஷா சைகல் நடித்த வனமகன் திரைபடம் நாளை வெளியாகிறது. சிலதினங்களுக்கு முன் வனமகன் திரைபப்டத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் விஜய் மிகவும் சின்சியராக இந்தப் படத்தை எடுத்துள்ளார். அவரால் மட்டுமே இம்மாதிரியான உழைப்பை கொடுக்க முடியும். அவர் என் அண்ணன் போன்றவர் என ஏகத்துக்கும் புகழ்ந்தார்.

 If you are really a tamilian do not upload vanamagan movie in internet told actor Jayam Ravi

அதுமட்டுமில்லாமல், என்னுடன் நடிக்கும் நடிகைகள் சினிமாவில் எங்கேயோ போய்விடுவார்கள் என்று சொல்வார்கள். இப்படத்தின் ஹீரோயின் சயீஷா சைகல் நிச்சயமாக பெரிய உயரத்துக்கு செல்வார் என கூறியதில் ஹீரோயின் ரொம்பவும் மகிழ்ந்தார்.

மேலும், வனமகன் திரைப்படத்தை நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் நெட்டில் அப்லோட் செய்யாதீர்கள் என்றார். இது கொஞ்சம் புதிய கோரிக்கையாக இருந்தது.

பொதுவாக, வாட்ஸ் அப், முகநூலில் நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும் என்று தான் வரும். ஜெயம் ரவி, அதற்கு எதிராக கூறியுள்ளார். ஆனால், உண்மையான தமிழர்களுக்கு இது சோதனைதான் என வழக்கம் போல் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

English summary
If you are really a tamilian do not upload vanamagan movie in internet told actor Jayam Ravi in press meet

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil