»   »  அட தேவுடா... அட்லீ - விஜய் படம் அண்ணாமலை 'ரீமேக்'காமே?

அட தேவுடா... அட்லீ - விஜய் படம் அண்ணாமலை 'ரீமேக்'காமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷயத்தைக் கேள்விபட்டதும் நமக்கே ஷாக்காக தான் இருந்தது. ரஜினி ரசிகர்களுக்கு எப்படி இருக்குமோ?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிளாக்பஸ்டர் படங்களில் அண்ணாமலையும் ஒன்று. ரஜினி ரசிகர்களின் மனசுக்கு நெருக்கமான படம். ரசிகரல்லாதோரும் கொண்டாடும் படம். முக்கியமாக ரஜினி நண்பனாகவும், அப்பாவாகவும் நடிப்பில் பின்னி எடுத்திருப்பார். 1992ல் வெளியானது.

Is Atlee - Vijay's next Thalaivar's Annamalai remake?

விஜய்யிடம் எப்போது கேட்டாலும் அண்ணாமலை படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை என்றுதான் சொல்வார்.

அந்த ஆசைக்கு தூபம் போட்டுத்தான் விஜய்யின் கால்ஷீட்டை வாங்கியிருக்கிறார் அட்லீ எனச் சொல்கிறார்கள். அட்லீ இயக்கிய ராஜாராணி, தெறி இரண்டு படங்களுமே மவுன ராகம், சத்ரியன் படங்களின் லைன்தான். அப்படி இந்த முறை அட்லீ கையில் எடுத்திருப்பது அண்ணாமலை படமாம்.

இயக்குநர் எவ்வளவோ ரகசியமாக வைத்திருந்தும் கூட உதவி இயக்குநர்கள் வட்டாரம் மூலம் இந்த விஷயம் இப்போது கசிந்துவிட்டது.

அட்லீ உங்களுக்கே இது நியாயமா? சொந்தமா யோசிக்கவே மாட்டீங்களா? அப்படி இல்லைனா பரவாயில்லை. எத்தனையோ அருமையான கதாசிரியர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.

இன்னொன்று அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேச ஆரம்பித்ததிலிருந்தே மிகுந்த கடுப்பிலிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இப்போது அவர்களின் மனசுக்குப் பிடிச்ச அண்ணாமலையில் கைவைப்பதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என யோசிக்க வேண்டாமா அட்லீ?

தெறி படம் சத்ரியன் ரீமேக் என்று படப்பிடிப்பின் போது எழுதிய பெண் நிருபருக்கு அட்லீ போன் பண்ணி திட்டினார். ஆனால் படம் வந்தபிறகு அந்த செய்தி உண்மையானது. அட்லீ உங்க ஃபோனுக்காக வெய்ட்டிங்!

English summary
Sources say that Vijay’s next film with Atlee will be an unofficial remake of Superstar Rajini's 1992 blockbuster Annamalai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil