»   »  பைரவா எப்படி இருக்கு... என்ன சொல்கிறார்கள் சிறப்புக்காட்சி பார்த்த ரசிகர்கள்?

பைரவா எப்படி இருக்கு... என்ன சொல்கிறார்கள் சிறப்புக்காட்சி பார்த்த ரசிகர்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் ரசிகர்கள் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த பைரவா படம் இன்று காலை வெளியாகிவிட்டது.

படம் குறித்த எதிர்மறை கருத்துகள், விமர்சனங்கள் அதற்குள் பரவிவிட்டன. அதைவிட கொடுமை படமே இணைய தளங்களில் வெளியாகிவிட்டது.


Is Bairava satisfies all?

இன்று அதிகாலை படத்தின் முதல் காட்சி சென்னையில் நடந்தது. சில நகரங்களில் இன்னும் ஒரு மணி நேரம் முன்பாகவே படம் தொடங்கிவிட்டது.


மேள தாளம் முழங்க மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் படம் பார்க்க வந்திருந்தனர்.


முதல் காட்சி முடிந்த நிலையில் படம குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், இடைவேளை அறிவிப்புக்கு முந்தைய காட்சி நல்ல ட்விஸ்ட் என்றும் கூறியுள்ள ரசிகர்கள், இரண்டாம் பாதியை அதி தீவிர விஜய் ரசிகர்கள் கூட ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளனர்.


'விஜய்க்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். சண்டைக் காட்சிகளில் விஜய் பின்னியிருக்கிறார்' என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்தப் படத்தில் பலரும் வறுத்து எடுத்திருப்பது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத்தான். 'இவர் திறமையை கொஞ்சம் ஓவராகவே எடை போட்டுவிட்டோமோ எனும் அளவுக்கு மிக சுமாரான இசையை விஜய் படத்துக்குக் கொடுத்துவிட்டதாக' கடுப்பாகக் கூறியுள்ளனர் பலரும்.


அதேபோல படத்தில் நகைச்சுவையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கும் என்பது பலரது ஏகோபித்த கருத்து.


பைரவா விஜய் படம். விஜய் ரசிகர்களுக்கான படம் என்பது முதல் காட்சி பார்த்த ரசிகர்களின் கருத்து.


பைரவா ஒன்இந்தியா விமர்சனம் இன்னும் சில மணி நேரத்தில்...

English summary
How is Vijay's Pongal special Bairava? Is it satisfies fans expectations?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil