பிரபல டைரக்டரின் படத்தில் நடிக்க மறுத்த விஜய்... என்ன காரணமுன்னு தெரியுமா?

சென்னை : சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, படிப்படியாக வளர்ந்து இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய். தனக்கென தனி பிராண்ட், தனி ஸ்டைல், தனக்கென உலகம் முழுவதும் ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.

ரஜினியையே பின்னுக்கு தள்ளி, அதிக சமபளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திற்கும் வர உள்ளார். விஜய்யின் அடுத்த படத்திற்காக அவருக்கு 120 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது.

டெல்லியில் பீஸ்ட்

டெல்லியில் பீஸ்ட்

விஜய் கடைசியாக நடித்த மாஸ்டர் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் டெல்லியில் துவங்கப்பட உள்ளது.

மீண்டும் ஹிட் டைரக்டர்கள்

மீண்டும் ஹிட் டைரக்டர்கள்

இந்நிலையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் நடத்திலும், அதைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்திலும் நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தெலுங்கு டைரக்டர் வம்சி படத்திலும் விஜய் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

தளபதி 66 யாருடன்

தளபதி 66 யாருடன்

விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை வம்சி தான் இயக்க போவதாகவும், இது நேரடி தெலுங்கு படமாக இருந்தாலும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படத்திற்காக தான் விஜய்க்கு பெரிய அளவிலான தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இது தான் காரணமா

இது தான் காரணமா

ஆனால் சமீப காலமாக இளம் டைரக்டர்கள், வித்தியாசமான கதைகளில் நடிப்பதையே டிரெண்டாக வைத்துள்ளார் விஜய். இதன் காரணமாகவே அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் படங்களுக்கு விஜய் ஓகே சொல்லி வருகிறார்.

இவருக்கா நோ சொன்னார் விஜய்

இவருக்கா நோ சொன்னார் விஜய்

லேட்டஸ்ட் தகவலாக, சமீபத்தில் விஜய்யை வைத்து படம் எடுக்க நினைத்த பிரபல டைரக்டர் பி.வாசு விஜய்யிடம் கேட்டுள்ளார். விஜய்க்கு ஏற்ற மாதிரி புதிய கதையுடன் சென்று விஜய்யை பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை விஜய் எந்த பதிலையும் சொல்லவில்லையாம். இது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தேடி போய் பேசிய டைரக்டர்

தேடி போய் பேசிய டைரக்டர்

ரஜினியை வைத்து மன்னன், சந்திரமுகி, பிரபுவை சின்னத்தம்பி உள்ளிட்ட பல மெகாஹிட் படங்களை இயக்கியவர் பி.வாசு. ஒரு காலத்தில் பாரதிராஜாவுக்கு அடுத்தபடியாக பி.வாசு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என தவம் கிடந்தனர் ஹீரோக்கள் பலர். ஆனால் இன்று, பி.வாசுவே தேடி போய் பேசியும், விஜய் பதில் சொல்லவில்லையாம்.

இருதரப்பும் மவுனம்

இருதரப்பும் மவுனம்

இளம் டைரக்டர்களின் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என விஜய் முடிவு செய்திருப்பது தான் இதற்கு காரணமாம். ஆனால் இந்த தகவல் பற்றி பி.வாசு மற்றும் விஜய் தரப்பிடம் இருந்து எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை.

டாப் 15 ல் பீஸ்ட்

டாப் 15 ல் பீஸ்ட்

விஜய் தற்போது, இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 15 படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், ஷைன் டாம் சாகோ, விடிவி கணேஷ், அபர்னா தாஸ், அஜித் விகல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X