சிவகார்த்திகேயனின் மாவீரன் சூப்பர் ஹீரோ படமா? அந்நியன் காப்பியா?...டீசரால் குழம்பிய ரசிகர்கள்
சென்னை : டைரக்டர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு மாவீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நேற்று வெளியிட்டார்.
சிவகார்த்திகேயன் நீண்ட முடியுடன் வித்தியாசமான லுக்கில் இருக்கும் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் எஸ்கே 20 படத்தின் வேலைகள் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தில் உள்ளன. அதே சமயம் எஸ்கே 21 படம் அறிவிப்பு நிலையிலேயே உள்ளது. இந்த சமயத்தில் சிவகார்த்திகேயனின் 22 வது படமாக மாவீரன் படம் உருவாக உள்ளது.

அப்படியே அந்நியன் சீனை வச்சிருக்காங்க
மாவீரன் டீசரில், இருட்டில் யாரோ ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அடித்து போட்டு நகர்ந்ததும், பின்னால் இருந்து கை போன்ற நிழல், அடிபட்டு கிடக்கும் உருவத்தை கயிறால் கட்டி தூக்கி நிறுத்துகிறது. அவரை அந்த கும்பல் மீண்டும் அடிக்க போகிறது. ஆனால் அவர் அந்த கும்பலில் முதல் ஆளை அடித்ததும், மொத்த 20 பேர் வந்து நிற்கிறார்கள். கயிறை உதறி தள்ளி விட்டு சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமாக ஆக்ஷனுக்கு தயாராவது போல் உள்ளது.

சூப்பர் ஹீரோ கதையா? அந்நியன் காப்பியா?
நேற்று வெளியிடப்பட்ட மாவீரன் டீசர் இதுவரை 2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இருந்தாலும் இந்த டீசர் அந்நியன் படத்தில் வரும் காட்சிகளை நினைவுப்படுத்துவதாக உள்ளது. இதனால் இது சூப்பர் ஹீரோ கதையா அல்லது அந்நியன் பட காப்பியா என ரசிகர்கள் குழப்பத்துடன் கேட்டு வருகின்றனர். மாவீரன் டீசரை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

படக்குழு என்ன சொல்கிறது
ஆனால் படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, மாவீரன் படம் சுப்பர் ஹீரோ படம் கிடையாதாம். டார்க் காமெடி ஆக்ஷன் படம் தானாம். இந்த ஒரு சீனை வைத்து அந்நியன் பட காப்பி என சொல்லி விட வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.

யாரெல்லாம் நடிக்கிறாங்க
மாவீரன் படத்தில் மெயின் வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார். ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கிறார் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில படத்தின் ஷுட்டிங்கை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

இவர் தான் டைரக்டரா
பைலிங்குவல் படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். டைரக்டர் மடோன் அஸ்வினின் முதல் படமான மண்டேலா படத்திற்கும் பரத் சங்கர் தான் இசையமைத்திருந்தார். யோகிபாபு நடித்த மண்டேலா படம் நேரடியாக டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு ஓட்டை பெறுவதற்காக அரசியல்வாதிகள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை காமெடியாக காட்டி இருந்தனர்.

எஸ்கே 21 இப்போ கிடையாதா
சிவகார்த்திகேயனின் 22 வது படமாக உருவாக உள்ள மாவீரன் படத்தின் ஷுட்டிங்கை ஒரு கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 21வது படமான எஸ்கே 21 படத்தை டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் மாவீரன் ஷுட்டிங் முடிந்த பிறகு தான் எஸ்கே 21 பட வேலைகளை துவக்க போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











