தளபதி 66 தெலுங்கு படமா? தமிழ் படமா?... விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்
சென்னை : தளபதி 66 படம் தெலுங்கில் விஜய் அறிமுகமாகும் முதல் படம் என்றும், இது பைலிங்குவல் படம் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் தளபதி 66 படம் தமிழ் படமா அல்லது தெலுங்கு படமா என்ற கேள்விக்கு சுவாரஸ்யமாக விளக்கம் அளித்துள்ளார் விஜய்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த படமான தளபதி 66 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் உள்ள சென்னை ஸ்டூடியோசில் நடைபெற்றது.

தளபதி 66 தெலுங்கு படமா
தளபதி 66 படத்தை தெலுங்கு முன்னணி டைரக்டரான வம்சி பைடபள்ளி இயக்குகிறார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க போவது உறுதியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட உள்ளதாகவும், இந்த படத்தின் மூலம் விஜய் டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க போவதாக சொல்லப்பட்டது.

டிவியில் விஜய் பேட்டி
விரைவில் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புக்களும் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் தற்போது வெளியாக உள்ள பீஸ்ட் ப்ரொமோஷனுக்காக சன் டிவியில் பேட்டி அளித்துள்ளார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு டிவியில் தோன்றி விஜய் பேட்டி அளித்துள்ளார்.

விஜய் சொன்ன விளக்கம்
விஜய்யை பேட்டி எடுத்த பீஸ்ட் டைரக்டர் நெல்சன் திலீப்குமார், நீங்கள் அடுத்து நடிக்கும் தளபதி 66 தெலுங்கு படமா என கேட்டார். இதற்கு பதிலளித்த விஜய், கண்டிப்பாக இல்லை. இது தமிழ் படம் தான். வழக்கமான மற்ற படங்களைப் போல் தமிழில் எடுத்து தெலுங்கில் டப் செய்ய போகிறார்கள். வம்சி பைடபள்ளி, தில் ராஜு ஆகியோர் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் என்பதால் அப்படி நினைத்து விட்டார்கள். தமிழில் ஒரு படம் பண்ண வேண்டும் என நினைப்பதாக தான் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் என்றார்.

குஷியான விஜய் ரசிகர்கள்
இதனால் தளபதி 66 படம் தெலுங்கு படம். தெலுங்கு ரசிகர்களை கவரும் விதமான அம்சங்களே அதிகம் இருக்கும் என நினைத்த ரசிகர்கள், தற்போது விஜய்யின் பதிலால் குஷியாகி உள்ளனர். தளபதி 66 பற்றிய அடுத்த அப்டேட் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











