தளபதி 66 கதை இது தானா....விஜய் பாராட்டினது இதுக்கு தானா?

சென்னை : விஜய் அடுத்து நடிக்க உள்ள தளபதி 66 கதை பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் பாராட்டினதா தில் ராஜு சென்ன கதை இது தானா என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

மாஸ்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். இந்த படம் தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் தயாராக உள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

 தளபதி 66 ஷுட்டிங்

தளபதி 66 ஷுட்டிங்

தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமான் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விரைவில் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. ஆரம்பமே விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

சரத்குமார் ரோல் இதுவா

சரத்குமார் ரோல் இதுவா

தளபதி 66 படத்தின் பூஜையில் சரத்குமார் கலந்து கொண்டார். அவர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் என்ன ரோலில் நடிக்க போகிறார், வேறு எந்த நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள் என்பது பற்றியும் கூறவில்லை. ஆனால் தற்போது சரத்குமாரின் ரோல் மட்டுமல்ல, படத்தின் கதை பற்றிய அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

தளபதி 66 கதை இது தானா

தளபதி 66 கதை இது தானா

இந்த படத்தில் விஜய்யின் அப்பா ரோலில் தான் சரத்குமார் நடிக்க போகிறாராம். விஜய்க்கு இந்த படத்தில் இரண்டு அண்ணன்களாம். விஜய்க்கு அண்ணன் ரோலில் நடிக்க 1980களில் ஃபேமசான நடிகர்கள் சிலரிடம் பேசப்பட்டு வருகிறதாம். தளபதி 66 படம் குடும்ப கதை என சொல்லப்படுகிறது. இதை தான் மறைமுகமாக இன்னொரு பூவே உனக்காக படமாக இருக்கும் என படக்குழுவினர் சொல்லி வருகிறார்களாம்.

இதுக்கு தான் விஜய் பாராட்டினாரா

இதுக்கு தான் விஜய் பாராட்டினாரா

தளபதி 66 படத்தின் கதையை கேட்டு விட்டு 20 வருடத்தில் எவரும் சொல்லாத கதையாக உள்ளதாக விஜய் பாராட்டியதாக தயாரிப்பாளர் தில் ராஜு கூறி இருந்தார். இதுவரை மாஸ் ஹீரோவாக மட்டும் இருந்த விஜய், இந்த படத்தில் குடும்ப, சென்டிமென்ட் நாயகனாக வித்தியாசமான கதையில் நடிக்க போகிறாராம். இதனால் ரசிகர்களிடம் இந்த படம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் உள்ளிட்ட விபரங்களை படக்குழு அறிவிக்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X