Don't Miss!
- News
அடிதூள் அறிவிப்பு.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு பறந்த குட்நியூஸ்.. தமிழ்நாடு அரசின் செம முடிவு.. என்ன?
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வாரிசு செட்டில் இருந்து வேகமாக வெளியேறிய விஜய்… ட்ரெய்லர் ரிலீஸ் தேதியுடன் வந்த வம்ஷி பைடிபள்ளி!
சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
பொங்கலுக்கு அஜித்தின் துணிவும் ரிலீஸாக உள்ளதால், திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் வாரிசு படத்திற்கான பேனர் வைத்து போட்டியை துவங்கி விட்டனர்.
முக்கியமாக சென்னையின் முக்கியமான திரையரங்குகள் எல்லாம் வாரிசு படத்தின் பிரம்மாண்டமான பேனர்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பொங்கல்
ரேஸில்
உக்கிரமான
வாரிசு,
துணிவு…
பஞ்சாயத்தை
கூட்டிய
விஜய்,
அஜித்
ரசிகர்கள்!

வாரிசு செட்டில் இருந்து வெளியேறிய விஜய்
விஜய்யின் வாரிசு பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளால், வாரிசு ரிலீஸ் தள்ளிப்போகும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது, வாரிசு பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், வாரிசு பட செட்டில் இருந்து நேற்றே வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் போர்ஷன் எல்லாம் முடிந்துவிட்டதால், அவர் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு கிளம்பிவிட்டாராம். விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்தாலும், இன்னும் சில பகுதிகள் மட்டும் வரும் 9ம் தேதி வரை படமாக்கப்படவுள்ளதாம்.

வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ் தேதி
டிசம்பர் 9ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்பதோடு, வாரிசு செகண்ட் சிங்கிளையும் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாம். இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக வாரிசு படத்தின் ட்ரெய்லர் ப்ளஸ் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் என செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் என்பதால், விஜய் லண்டன் செல்ல வாய்ப்புகள் உள்ளன. அதனால், வாரிசு ட்ரெய்லரை ஜனவரி 1ம் தேதி நியூ இயர் ஸ்பெஷலாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் வாரிசு பேனர்கள்
விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவும் பொங்கல் ரேஸில் களமிறங்குகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ரேஸில் விஜய்யும் அஜித்தும் மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. துணிவு தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளதால், அதிகமான ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்படுவதாக சொல்லப்பட்டன ஆனால், அது உண்மையில்லை என்றும் உடனடியாக செய்திகள் வெளியானது. அதனால், விஜய் ரசிகர்கள் பேனர் வைப்பதில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகளில், விஜய் ரசிகர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள வாரிசு படத்தின் பிரம்மாண்டமான பேனர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சம்பவம் யார் செய்றாங்கன்னு பார்ப்போம்
வாரிசு, துணிவு படங்களுக்கு சமமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், பொங்கல் ரேஸில் யார் சம்பவம் செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே வாரிசு படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. ஆனால், துணிவு படத்தில் இருந்து இன்னும் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சில்லா சில்லா' இன்னும் வெளியாகவில்லை. இந்தப் பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் இல்லை. இதனிடையே, டிசம்பர் முதல் வாரத்தில் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.