திரையரங்குகளில் 100வது நாள்.. விக்ரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

ஓடிடியிலும் வெளியாகி சிறப்பான வரவேற்பை இந்தப் படம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் இந்தப் படம் தற்போது 100வது நாளை திரையரங்குகளில் எட்டி சிறப்பான சாதனையை புரிந்துள்ளது.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பையும் அதையொட்டிய வசூலையும் பெற்றது.

சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர்

சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர்

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். குறிப்பாக சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களை மிரட்டியது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்காக தற்போது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

 விக்ரம் 3 படம்

விக்ரம் 3 படம்

படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் அடுத்த பாகத்திற்கான முதன்மை கதாபாத்திரமாக உருவாகவுள்ளதாகவும் விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் படத்தின் சக்சஸ் மீட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தளபதி 67 படத்தில் இணையவுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாகவும் அதன்பின்பே விக்ரம் 3 படத்தில் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிரட்டலான திரைக்கதை

மிரட்டலான திரைக்கதை

இதனால் ரசிகர்கள் சற்றே ஏமாற்றம் அடைந்தாலும் அடுத்த ஆண்டிலாவது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விக்ரம் படம் மிரட்டலான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் ரசிகர்களை மிரட்டியது. சிறிய கதாபாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் 100வது நாள்

திரையரங்குகளில் 100வது நாள்

இந்நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றைய தினம் 100வது நாளை வெற்றிகரமாக எட்டியுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் போஸ்டர்களை வெளியிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இந்த 100வது நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

நீண்ட நாட்களுக்கு பிறகு இதுபோன்ற 100வது நாள் போஸ்டரை காண்பது மிகவும் சிறப்பாக உள்ளதாக விமர்சகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தப் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஓடிடியிலும் வெளியானது. இருந்தப் போதிலும் இந்தப் படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியன் 2 படம்

இந்தியன் 2 படம்

கமல்ஹாசன் அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் விபத்து உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதையொட்டி ஷங்கர் மற்றும் தயாரிப்புத் தரப்பில் பிரச்சினைகள் எதிரொலித்து படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிரச்சினைகள் களையப்பட்டு தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X