Don't Miss!
- News
நான் வீட்டில் இல்லாத போது என் மகள்களிடம் டான்ஸர் ரமேஷ் எப்படி நடந்து கொண்டார்? இன்பவள்ளி பேட்டி
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புஷ்பா பட நாயகனை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்.. சூப்பர் காம்பினேஷனா இருக்கே!
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் அவரை இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநராக மாற்றியுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தொடர்ந்து கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட்டிலும் முன்னணி நடிகர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக மாறியுள்ளார் லோகேஷ்.
’சிவாஜி' திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள்.. ரஜினி - ஏவிஎம் சரவணன் திடீர் சந்திப்பு!

விக்ரம் படம்
நடிகர் கமல், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்து 2 வாரங்களாக திரையரங்குகளில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சிறப்பான வளர்ச்சி
இந்தப் படத்தையடுத்து இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் மிகச்சிறந்த இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என 4 படங்களை மட்டுமே இயக்கியுள்ள லோகேஷின் இந்த வளர்ச்சி மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

உயரத்தில் கொண்டு சென்ற விக்ரம்
இவர் தற்போது மற்ற இன்டஸ்ட்ரியிலும் மிகவும் அதிகமாக விரும்பப்படும் இயக்குநராக மாறியுள்ளார். குறிப்பாக விக்ரம் படம் இவரை மிகவும் உயரத்தில் கொண்டு சென்றுள்ளது. இதனால் மிகவும் கவனமாக அடுத்ததாக விஜய் படத்தை இவர் உருவாக்குவார் என்று நம்பப்படுகிறது. இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.

விஜய் பட அறிவிப்பு
விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக வெயிட்டிங். தற்போது விஜய் நடித்துவரும் தளபதி 66 படத்தை காட்டிலும் லோகேஷின் இயக்கத்தில் இன்னும் அறிவிப்பு கூட வெளியாகாத தளபதி 67 படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

அல்லு அர்ஜூனை இயக்குகிறாரா லோகேஷ்?
இந்தப் படத்தை விக்ரம் போல வெற்றிப்படமாக லோகேஷ் கொடுத்தால், அவரது புகழ் மேலும் அதிகரிக்கும். சர்வதேச அளவில் அவர் மேலும் உயரத்தை அடைவார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய் படத்திற்கு அடுத்ததாக டோலிவுட்டில் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூனை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உறுதியான கைதி 2 படம்
இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்போதே இந்த தகவல் உறுதிப்படுத்தப்படும். முன்னதாக விஜய் படத்திற்கு அடுத்ததாக விக்ரம் 3 அல்லது கைதி 2 படத்தை அவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இதில் கைதி 2 படத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.