அஜித்துக்கு இப்படி ஒரு மாஸ் கதை இருக்குது... ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்த லோகேஷ் கனகராஜ்!
சென்னை: மாநகரம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், நான்கே படங்களில் கோலிவுட்டின் டாப் இயக்குநராக மாஸ் காட்டி வருகிறார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 67ல் விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் லோகேஷ் கனகராஜ்.
தளபதி 67 ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித்துடன் லோகேஷ் கனகராஜ் இணையலாம் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

மோஸ்ட் வாண்டட் டைரக்டர்
குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகம் கொடுத்தார். முதல் படத்திலேயே கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ், அடுத்து இயக்கிய கைதி மூலம் இன்னும் மாஸ் காட்டினார். இதனால், அடுத்து விஜய்யுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ், இன்று தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வருகிறார்.

அஜித்துடன் கூட்டணி?
விக்ரம் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தளபதி 67 திரைப்படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். விஜய்யுடன் கமல், தோனி, விஷால், சஞ்சய் தத் என பலரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித்துடன் லோகேஷ் இணைந்தால் அந்தப் படம் எப்படி இருக்கும் என ரசிகர்களிடம் விவாதம் எழுந்தது. இப்போது அதற்கு லோகேஷ் கனகராஜிடம் இருந்தே பதில் கிடைத்துள்ளது. இது, அஜித் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

அந்த மாதிரி ஒரு கதை
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜிடம், அஜித்துடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா?. அப்படி இணைந்தால் அந்தப் படத்தின் கதை எப்படி இருக்கும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், அஜித்துடன் இணைய எனக்கும் ஆசை தான், அப்படி அவருடன் கூட்டணி அமைந்தால், தீனா மாதிரி ஒரு படம் இயக்குவேன் என அல்டிமேட்டாக கூறியுள்ளார். லோகேஷின் இந்த பதிலால் சிலிர்த்துப் போன அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மாஸ் காட்டிய அஜித்
2001ம் ஆண்டு வெளியான தீனா திரைப்படம், அஜித்துக்கு ஆக்சன் ஹீரோ என்ற இமேஜை ரசிகர்களிடம் ஏற்படுத்திக் கொடுத்தது. இயக்குநர் ஏஆர் முருகதாஸுக்கு இதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ரசிகர்கள் கெத்தாக அழைக்கும் 'தல' என்ற நிக் நேம் அஜித்துக்கு இந்தப் படத்தில் இருந்துதான் கிடைத்தது. லோக்கல் ரவுடியாக அஜித் நடித்த தீனா சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், அஜித்துடன் இணைந்தால் அது தீனா மாதிரியான படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியது ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











