அஸ்வின் எங்கே காணோம்.. தர்ஷனுடன் அந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட லாஸ்லியா.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை: நடிகை லாஸ்லியா தர்ஷனுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட ரீல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வரிசையாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஹர்பஜன் சிங், அர்ஜுன், சதீஷ் நடித்த பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமனார்.

கவினுடன் காதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவின் உடன் லாஸ்லியாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரது ஜோடி பொருத்தமும் ரொம்ப நல்லா இருக்கு என ரசிகர்கள் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வந்தனர். ஆனால், லாஸ்லியாவின் அப்பா சம்மதம் தெரிவிக்காத நிலையில், அவர்களது காதல் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இதே போல பல சீசன்களிலும் நிகழ்ச்சிக்கு பிறகு காதல் முடிந்து விடுவதை பார்த்த ரசிகர்கள் எல்லாமே டிராமா என ட்ரோல் செய்தனர்.

ரெண்டுமே ஓடல
ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்து லாஸ்லியா ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமான பிரண்ட்ஷிப் மற்றும் சமீபத்தில் தர்ஷன் உடன் அவர் இணைந்து நடித்த கூகுள் குட்டப்பா என இரு படங்களும் படு தோல்வியை சந்தித்த நிலையில், லாஸ்லியாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். ஆனாலும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரீல்களையும் போட்டோக்களையும் போட்டு டிரெண்ட் செய்து வருகிறார்.

தர்ஷன் உடன் டான்ஸ்
இந்நிலையில், தற்போது பேபி நீ சுகர் பாடலுக்கு பிக்பாஸ் தர்ஷன் உடன் இணைந்து நடனமாடிய ரீல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார் நடிகை லாஸ்லியா. செம க்யூட்டாக ஸ்டெப்ஸ் போட்டு லாஸ்லியா ஆடியதை பார்த்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளும், ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.
எதற்காக இந்த டான்ஸ்
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் மூலம் ஹீரோவானார். குட்டி பட்டாஸ், அடிபொலி என ஏகப்பட்ட ஆல்பம் பாடல்களுக்கு நடனமாடி உள்ளார். அவருடன் இணைந்து தான் பேபி நீ சுகர் பாடலுக்கு நடிகை லாஸ்லியா நடனமாடி இருந்தார். அந்த பாடல் யூடியூபில் 10 மில்லியன் வியூஸ்களை அள்ளி உள்ளதை கொண்டாடத்தான் இப்படியொரு ஆட்டத்தை லாஸ்லியா போட்டுள்ளார்.
Recommended Video

அஸ்வின் எங்கே
ஆனால், அஸ்வின் உடன் இணைந்து நடனமாடி ரீல் போடாமல், தர்ஷன் உடன் இணைந்து ஆடியிருக்கீங்களே லாஸ்லியா என்றும் அஸ்வின் எங்கே? என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், மீண்டும் தர்ஷன் உடன் இணைந்து லாஸ்லியா நடனமாடியதை பார்த்த ரசிகர்கள் இன்னொரு படத்திலும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க போறீங்களா? என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











