»   »  'விழுந்தா கஷ்டம்...' விஜய்யிடம் பாடம்கற்ற பாடலாசிரியர்!

'விழுந்தா கஷ்டம்...' விஜய்யிடம் பாடம்கற்ற பாடலாசிரியர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக நிறைய நல்ல விஷயங்களைக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் போது ரஜினி ஸ்டைலில் ஒரு குட்டிக் கதை கூறி அதில் இருக்கும் வாழ்க்கைத் தத்துவங்களைக் கூறுவார்.

அவர் கூறும் கதைகளுக்கும், பஞ்ச் டயலாக்குகளுக்கும் ரசிகர்கள் ஆரவாரமெழுப்புவார்கள். அவர் சொன்ன விஷயங்களை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்குவார்கள். இன்னொருபக்கம் அவர் சொன்னதை வைத்தே மீம்ஸ்களும் தெறிக்கும் என்பது வேறு விஷயம்.

Lyricist learned from Actor Vijay

சமீபத்தில் கூட மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்காக சில அறிவுரைகளை வழங்கியிருந்தார். எதிர்மறையான விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என அவர் சொன்னது வைரல் ஆனது.

இந்நிலையில், 'மெர்சல்' படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் பாடலாசிரியர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர் 'விஜய்யிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்...' என்று ட்விட்டரில் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த விவேக், 'அவரிடம் இருந்து கற்றுக்கொண்டதை என் மொழியில் கூறுகிறேன். நம்ம புகழ் தான் உயரத்துக்குப் போகணும், நாமளும் கூட போக கூடாது, விழுந்தா கஷ்டம்' என ட்வீட் செய்திருக்கிறார். இந்த வாழ்க்கைத் தத்துவத்தை ரீட்வீட் செய்து கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

English summary
Lyricist Vivek told about the lesson, which he learned from Actor vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil