தளபதி 67ல் இணையும் மலையாள இளம் நடிகர்… சம்பளத்தை குறைக்கும் முடிவில் விஜய்?

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது மலையாள இளம் நடிகரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பரில் தளபதி 67 அப்டேட்

டிசம்பரில் தளபதி 67 அப்டேட்

விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. அது ஒருபக்கம் இருக்க, அந்தப் படத்தில் இருந்து விஜய்யின் மாஸ்ஸான ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகின்றன. வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் அடுத்து நடிக்கவுள்ள தளபதி 67 பட அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் பேட்டிக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் டிசம்பரில் தளபதி 67 அப்டேட் வரும் என தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் இணையும் மல்லுவுட் நடிகர்

விஜய்யுடன் இணையும் மல்லுவுட் நடிகர்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே தாறுமாறாக உள்ளது. தளபதி 67 அப்டேட் டிசம்பரில் வெளியாகும் என லோகேஷ் கூறியிருந்தாலும், இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. கெளதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மலையாள இளம் நடிகர் ஒருவரும் தளபதி 67ல் கமிட் ஆகியுள்ளாராம்.

20 வயது இளம் நடிகர் மேத்யூ தாமஸ்

20 வயது இளம் நடிகர் மேத்யூ தாமஸ்

மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மேத்யூ தாமஸ். 20வயது இளம் நடிகரான மேத்யூ தாமஸ், தளபதி 67 படத்தில் விஜய்யுடன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் சினிமாவில் அறிமுகமான போது அவரது தோற்றம் எப்படி இருந்ததோ அதேபோல் காணப்படுகிறார் மேத்யூ தாமஸ். அதனால், விஜய்யின் இளம் வயது கேரக்டர் அல்லது அவரது தம்பி ரோலில் மேத்யூ தாமஸ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் லோகேஷ் கனராஜ் சொன்னபடி அபிஸியல் அப்டேட் எல்லாமே டிசம்பரில் தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளத்தை குறைத்த விஜய்

சம்பளத்தை குறைத்த விஜய்

இதனிடையே தளபதி 67 படத்தில் விஜய் தனது சம்பளத்தை சிறிது குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் சம்பளம் அதிகபட்சம் நூறு கோடிக்கு மேல் இருக்கும் எனவும், அதில் 5 கோடி ரூபாய் மட்டும் தளபதி 67 படத்துக்காக குறைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினி, கமலுக்குப் பிறகு விஜய் தான் டாப்பில் இருக்கிறார். இந்நிலையில், தளபதி 67 படத்துக்காக விஜய் சம்பளத்தை குறைத்தாரா? ஏன் சம்பளத்தை குறைத்தார் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X