»   »  மெர்சல் சென்சார் ஓவர்... என்ன ரிசல்ட் தெரியுமா?

மெர்சல் சென்சார் ஓவர்... என்ன ரிசல்ட் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தீபாவளிப் படமான மெர்சல் சென்சார் நேற்று முடிந்தது. யு சான்று கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், இந்தப் படத்துக்கு யு ஏ சான்று கிடைத்துள்ளது.

விஜய் - சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Mersal censored

ரூ 130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் மெர்சல் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் சொந்தமாகவே வெளியிட முடிவு செய்துள்ளது.

படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

தீபாவளி தினமான அக்டோபர் 18-ம் தேதி படம் வெளியாகிறது.

English summary
Vijay's Diwali release Mersal has got UA from Censor

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil