நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்...அஜித் சார்பில் பங்கேற்ற மனைவி ஷாலினி

சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், அவரது மனைவி ஷாலினி அஜித் மட்டும் தனியாக கலந்து கொண்டுள்ளார்.

Recommended Video

Nayanthara – Vignesh Shivan திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள் #Celebrity | Filmibeat Tamil

அனைவரும் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்த நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக, பலத்த பாதகாப்புடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான், கார்த்தி, விஜய் சேதுபதி, சரத்குமார், உதயநிதி ஸ்டாலின், கேஎஸ் ரவிக்குமார், மணிரத்னம், போனி கபூர் உள்ளிட்ட பல விஐபி.,க்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். பல பிரபலங்கள் சோஷியல் மீடியா மூலம் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

முதல் ஆளாக வந்த ரஜினி

முதல் ஆளாக வந்த ரஜினி

ஆரம்பம் முதலே நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொள்ளும் விஐபி.,க்கள் பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் பெயர்கள் தான் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ரஜினியும், அஜித்தும் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது. இதில் ரஜினி முதல் ஆளாக வந்து வாழ்த்தி விட்டார். அஜித், விஜய் வருவார்களா என்று தான் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.

 அஜித்திற்கு பதிலாக வந்த ஷாலினி

அஜித்திற்கு பதிலாக வந்த ஷாலினி

ஆனால் அஜித்திற்கு பதில் அவரது மனைவி ஷாலினி அஜித், தனியாக வந்து திருமணத்தில் கலந்து கொண்டார். இதனால் அஜித் வர மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. அஜித் தற்போது ஏகே 61 ஷுட்டிங் வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதனால் தான் அவர் சார்பாக ஷாலினி வந்து சென்றதாக கூறப்படுகிறது.

டைரக்டர் கல்யாணத்துக்கே வரலியா

டைரக்டர் கல்யாணத்துக்கே வரலியா

அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னை அடுத்து இயக்க போகும் டைரக்டர் திருமணத்திற்கும் அஜித் வரவில்லை என்ற விஷயம் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதை அஜித் வழக்கமாக வைத்துள்ளார். அதை தான் இப்போதும் செய்துள்ளார் என பலரும் சாதாரணமாக கூறி வருகின்றனர்.

அஜித் வரல...விஜய் வந்துட்டார்

அஜித் வரல...விஜய் வந்துட்டார்

ஏற்கனவே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேரடியாக சென்று அழைப்பு விடுத்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. அவருக்கு பதில் தான் உதயநிதி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் அஜித்தும் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X