விஜய் எப்போ ஷு மாற்றினார்... இப்படி சொதப்பீட்டிங்களே நெல்சன்
சென்னை : விஜய்யின் பீஸ்ட் டிரைலரை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்களின் வேலை இன்னும் குறைந்த பாடில்லை. டிரைலரை அணு அணுவாக கவனித்து, கிண்டல் செய்து வருகிறார்கள்.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்ததாலும், படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதாலும் படத்தின் டிரைலரை சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்டது.

தியேட்டரில் ரிலீசான டிரைலர்
பீஸ்ட் டிரைலரை முதல் முறையாக தியேட்டரில் திரையிட்டு அசத்தினர். இதனை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். உணர்ச்சிகரமாக, விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கு சென்று விட்டனர். ஆட்டம் பாட்டத்துடன் பீஸ்ட் டிரைலரை கண்டு ரசித்தனர். இந்த டிரைலர் யூட்யூப்பில் இதுவரை 22 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

எந்த படத்தோட காப்பி
ஆனால் வழக்கம் போல் நெட்டிசன்கள் பீஸ்ட் டிரைலரையும் ஆராய்ச்சி செய்து, அதில் உள்ள குறைகள், சொதப்பல்கள், பலரும் கவனிக்காமல் விட்டதை கவனித்து கலாய்த்து வருகிறார்கள். டிரைலர் வெளியிடப்பட்ட உடனேயே இது மணி ஹெய்ஸ்ட் காப்பியா, கூர்கா காப்பியா என கேட்டு சந்தேகத்தை கிளப்பினர். இந்நிலையில் தற்போது சொதப்பல்களையும் கவனித்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.

எப்போ ஷு மாற்றினார்
மாலில் தீவிரவாதிகளுடன் விஜய் சண்டை போடும் காட்சிகளில் முதல் ஷாட்டில் விஜய் சாதாரண ஷு அணிந்துள்ளார். அடுத்த ஷாட்டில் ஸ்கேட்டிங் ஷு அணிந்துள்ளார். அதெப்படி சீரியசான சண்டைக்கு நடுவே விஜய் ஷு மாற்றி இருப்பார். எப்போ போய் ஷுவை மாற்றி விட்டு வந்தார். டைரக்டர் நெல்சன் இதை கூட கவனிக்காம இப்படி சொதப்பிட்டாரே.
Recommended Video

இப்படி ஏமாத்திட்டீங்களே
மணி ஹெய்ஸ்ட், கூர்கா, விக்ரம், அட்டிம் ஃபைஸ்லா போன்ற படங்களின் காப்பியாக தான் பீஸ்ட் டிரைலர் உள்ளது. கேஜிஎஃப் 2 டிரைலர் அளவிற்கு எதிர்பார்த்தவர்களுக்கு பீஸ்ட் டிரைலர் ஏமாற்றமே அளித்துள்ளதாக கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











