தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ்... முதல் வார வசூலில் ஜில்லா முதலிடம், வீரம் இரண்டாமிடம்!

By Shankar

சென்னை: பொங்கலுக்கு வெளியான விஜய் மற்றும் அஜீத்தின் இரண்டு மெகா படங்களில், பந்தயத்தில் இரண்டுமே சரிக்கு சமமாக ஓடினாலும்.

இப்போது இரண்டு படங்களும் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதால், முதல்வார வசூல் நிலவரம் கிடைத்துள்ளது.

ரூ 44 கோடி

ரூ 44 கோடி

அதன்படி ஜில்லா முதல் வாரத்தில் தமிழகம் மற்றும் உலகெங்கும் ரூ 44 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. ரஜினியின் படங்களுக்கு அடுத்து, இந்த சாதனையைச் செய்துள்ளது விஜய்யின் ஜில்லாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரம் அடுத்து...

வீரம் அடுத்து...

அஜீத்தின் வீரம் படமும் சிறப்பாக ஓபனிங்கைப் பெற்றுள்ளது. ஆனால் ஜில்லாவை விட நான்கு கோடி ரூபாய் குறைவான வசூல் என்பதால், இந்தப் படத்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

ஏன் ஜில்லாவுக்கு அதிக வசூல்?

ஏன் ஜில்லாவுக்கு அதிக வசூல்?

ஜில்லாவை விட வீரம் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. பார்வையாளர்களின் வாய்மொழி விமர்சனங்களுக்கும் வீரம் படத்துக்கு ஆதரவாகவே இருந்தும் ஜில்லாவுக்கு அதிக வசூல் குவிந்திருப்பதற்கு, படத்தின் நட்சத்திர மதிப்பு மற்றும் அதிக அரங்குகளில் வெளியாகியிருப்பது போன்றவைதான் காரணம் என்று தெரிகிறது.

இரவுக் காட்சி - ஜில்லாவுக்கு அதிகக் கூட்டம்

இரவுக் காட்சி - ஜில்லாவுக்கு அதிகக் கூட்டம்

தமிழகத்தின் கிராமங்கள் சார்ந்த நகரங்களில் ஜில்லாவுக்கு அதிக கூட்டத்தை பார்க்க முடிந்தது, படம் வெளியான ஒரு வாரம் கழித்தும். இரவுக் காட்சிகளுக்கு 75 சதவீத கூட்டம் இன்னமும் இந்தப் படத்துக்கு தொடர்வது ஒரு ஆச்சர்யமான விஷயம்.

இரண்டாவது வாரத்தில் மாறலாம்

இரண்டாவது வாரத்தில் மாறலாம்

ஆனாலும் நேர்மறை பேச்சுகள் காரணமாக இரண்டாவது வாரத்தில் வீரம் வசூல் நிலவரம் மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X