விஜய்யின் வாரிசு படத்துடன் மோத தயக்கம்… ஆதிபுருஷ் ரிலீஸை தள்ளி வைக்கும் பிரபாஸ்?

ஐதராபாத்: பிரபாஸ், கீர்த்தி சனோன் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

பொங்கலை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு, சிரஞ்சீவி, பாலையா ஆகியோரின் படங்களும் வெளியாகவுள்ளன.

விஜய்யின் வாரிசு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளதால் ஆதிபுருஷ் படத்தை பொங்கலுக்கு வெளியிட பிரபாஸ் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸின் ஆதிபுருஷ்

பிரபாஸின் ஆதிபுருஷ்

பாகுபலி படத்துக்கு பின்னர் பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் பிரபாஸ், இப்போது சலார், ப்ராஜக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரபாஸ் ராமராக நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோனும் ராவணனாக சைஃப் அலிகானும் நடித்துள்ளனர். கடந்த 2ம் தேதி வெளியான ஆதிபுருஷ் டீசரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ததுடன் கடும் விமர்சனத்தையும் சந்தித்தது.

ரிலீஸ் தேதியில் மாற்றம்?

ரிலீஸ் தேதியில் மாற்றம்?

ஆதிபுருஷ் டீசருக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால் படம் வெளியாகும் போது ரசிகர்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என படக்குழுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதுமட்டும் இல்லாமல் கிராஃபிக்ஸ் காட்சிகள் மொக்கையாக இருப்பதாக பலரும் கமெண்ட்ஸ் அடித்து வந்தனர். இந்நிலையில், ஜனவரி 12ம் தேதி வெளியாகவிருந்த ஆதிபுருஷ் ரிலீஸை படக்குழு தள்ளி வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பொங்கலுக்கு ஆதிருபுருஷ் வாரிசு, துணிவு, வால்டேர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களும் ரிலீஸாகவுள்ளன.

விஜய், அஜித்துடன் மோத பயமா?

விஜய், அஜித்துடன் மோத பயமா?

விஜய்யின் வாரிசு படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இதனால், தெலுங்கில் பிரபாஸின் ஆதிபுருஷ்க்கும் விஜய்யின் வாரிசுக்கும் இடையே நேரடி போட்டி எழுந்துள்ளது. மேலும், திரையரங்குகள் கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல், அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. அஜித்துக்கும் தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என பிரபாஸ் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

சிரஞ்சீவி, பாலைய்யா

சிரஞ்சீவி, பாலைய்யா

அதேபோல், தெலுங்கிலும் சீனியர் நடிகர்களான சிரஞ்சீவியும் பாலையாவும் பொங்கல் ரேஸில் களமிறங்குகின்றனர். சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா படமும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகின்றன. ஏற்கனவே விஜய், அஜித் ரேஸில் இருக்க, இப்போது தெலுங்கு சீனியர் நடிகர்களான சிரஞ்சீவியும் பாலையாவும் களத்தில் இறங்கியதால் பிரபாஸ் ரொம்பவே குழப்பத்தில் உள்ளாராம். இதனால், ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கலாம் என திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அப்டேட் வெளியாகும் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X