'முன்பே வா' பாட்டு பாடி சூர்யா அங்கிளை அசத்திய குட்டி அருவி
Recommended Video

சென்னை: பாடகியும், குழந்தை நட்சத்திரமுமான பிரனிதி சூர்யாவை சந்தித்து முன்பே வா பாடலை பாடி அசத்தியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பிரபலமானவர் பிரனிதி. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அருவி படத்தில் குட்டி அருவியாக நடித்திருந்தார் பிரனிதி.
பாடுவது தவிர நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்தார்.
முன்பே வா
பிரனிதி அண்மையில் நடிகர் சூர்யாவை சந்தித்தார். அப்போது சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் வந்த முன்பே வா பாடலை பாடி அசத்தினார் பிரனிதி.

பிரனிதி
பிரனிதியின் பாடலை கேட்ட சூர்யா அவரை பாராட்டினார். பிரனிதிக்கு தனித்திறமை இருப்பதாகவும், அதை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்று சூர்யா அறிவுரை வழங்கியுள்ளார்.
வைரல்
பிரனிதியுடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் சூர்யா. சூர்யா, பிரனிதி இருக்கும் புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.
மகிழ்ச்சி
சூர்யா அங்கிளை சந்தித்த மகிழ்ச்சியை பிரனிதி ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். சூர்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











