Don't Miss!
- News
‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வாரிசு ட்ரெய்லரை கொண்டாடிய IT Guys: இது ஐடி கம்பெனியா இல்லா மல்டிபிளக்ஸ் தியேட்டரா?
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியானது.
இந்த ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்கு முன்பாகவே 20 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக உள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வெளியான வாரிசு ட்ரெய்லரை ரசிகர்களையும் கடந்து ஒரு தரப்பினர் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
அதெல்லாம் கம் போட்டு ஒட்டிக்கலாம் அம்மா.. வாரிசு பட வசனத்தை வைத்தே டிரெண்டாகும் வீடியோ மீம்!

வாரிசு ட்ரெய்லர் 20 மில்லியன் வீவ்ஸ்
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இந்தப் படத்துடன் அஜித்தின் துணிவும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. துணிவு ட்ரெய்லர் கடந்த வாரமே வெளியாகிவிட்ட நிலையில், விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் நேற்று மாலை ரிலீஸாகி ட்ரெண்டானது. சன் டிவியின் யூடியூப் தளத்தில் வெளியான வாரிசு ட்ரெய்லர் இதுவரை 20 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஒரே தேதியில் வாரிசு - துணிவு
நேற்று மாலை வாரிசு ட்ரெய்லர் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில், துணிவு ரிலீஸ் தேதியை அறிவித்தார் போனி கபூர். அதன்படி துணிவு திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் வாரிசு ரிலீஸ் எப்போது என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. தற்போது அதற்கும் விடை கிடைத்துள்ளது. விஜய்யின் வாரிசும் வரும் 11ம் தேதி ரிலீஸாகும் என பட தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். இதனால் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளன.

ஐடி கம்பெனியில் கொண்டாட்டம்
விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வாரிசு ட்ரெய்லர் ரிலீஸை தனியார் ஐடி நிறுவனம் தங்களது ஊழியர்களுடன் செலிப்ரேட் செய்துள்ளது. ஐட் ஊழியர்களின் வாரிசு ட்ரெய்லர் செலிப்ரேஷன் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அதில் அலவலகத்தில் இருக்கும் டிவிக்கள் அனைத்திலும் வாரிசு ட்ரெய்லர் ஒளிபரப்பாக, ஐடி ஊழியர்கள் அனைவரும் உற்சாகமாக கூச்சலிட்டு கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ட்ரோலாகும் வாரிசு ட்ரெய்லர்
அதேநேரம் வாரிசு ட்ரெய்லரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர். படம் முழுவதும் நடிகர்களின் காஸ்ட்யூம், மேக்கிங் ஸ்டைல் அனைத்தும் எலைட் ஆடியன்ஸை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் வாரிசு திரைப்படம் இந்தி சீரியல் மாதிரி இருக்குமோ எனவும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதேபோல் சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற கிராமத்து மண் வாசனையுடன் கூடிய குடும்ப படங்களை தான் கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால், வாரிசு ட்ரெய்லர் அப்படியில்லை எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். மேலும், வாரிசு படத்தின் காமெடி காட்சிகளும் நெட்டிசனளால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.