வலிமை படம் பற்றி அறிவிப்பு... ரசிகர்களை வெறுப்பேற்றிய போனிகபூர்... கலாய்த்த ரசிகர்கள்!
மும்பை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கிவரும் அவரது ஏகே61 படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கை ஜூலை மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

நடிகர் அஜித்
நடிகர் அஜித், இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிக்கபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி ரிலீஸ்
வலிமை படம் போல இந்தப் படம் தாமதமாக இல்லாமல் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டு அறிவித்துள்ளார். இதையடுத்து படத்தின் சூட்டிங்கை வரும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க அவர் ஹெச் வினோத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சூட்டிங் தற்போது விரைவுப் படுத்தப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் சூட்டிங்
படத்தின் நாயகி உள்ளிட்ட எந்த விவரங்களும் அறிவிக்கப்படாமல் சூட்டிங் துவங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அஜித் உள்ளிட்டவர்களின் காட்சிகள் மவுண்ட் ரோட் மற்றும் பேங்க் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது.

பேங்க் கொள்ளை
பேங்க் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வலிமை படத்தில் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஹெச் வினோத் தவறியுள்ள நிலையில், அவரிடமிருந்து தீரன் அதிகாரம் ஒன்று ரேஞ்சுக்கு ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டைட்டில் அறிவிக்கப்படுமா?
ஏகே61 படத்தின் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை. சூட்டிங் துவக்கம் குறித்தும் முறையாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அப்டேட் கிங் என்று கூறப்படும் போனிக்கபூர் இன்றைய தினம் அஜித் பிறந்தநாளையொட்டி, படத்தின் டைட்டிலை அறிவிப்பார் என்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வலிமை குறித்த அறிவிப்பு
இந்நிலையில் அவர்களை வெறுப்பேற்றும் வகையில் ஜீ தமிழ் சேனலில் இன்று மாலை வலிமை படம் ஒளிபரப்பாக உள்ளதாக போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து அவரை சார் டீ இன்னும் வரல ரேஞ்சுக்கு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இன்று ஏகே61 அறிவிப்பு?
சீக்கிரமாக ஏகே61 அப்டேட்டை வெளியிடுமாறும் கேட்டு வருகின்றனர். ரசிகர்களின் இந்த கோரிக்கையை அவர் கண்டிப்பாக நிறைவேற்றும் வகையில் அப்டேட் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாகவே வலிமை படத்தின் அறிவிப்பை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











