ஜென்டில் மேன்-2 யார் இசையமைப்பாளர் யூகித்தால் தங்கக்காசு பரிசு...சொல்லுங்க தங்கக்காசை வெல்லுங்க!

சென்னை : நடிகர் அர்ஜுன், மதுபாலா லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 1993ல் வெளியான படம் ஜென்டில்மேன்.

Recommended Video

GENTLEMAN படத்துக்கு ஷங்கர் வாங்குன 4 DIGIT CHECK | REWIND RAJA EPISODE-18 | FILMIBEAT TAMIL

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெற்றது. கேடி குஞ்சுமோன் படத்தை தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கப்பட உள்ளதாக கேடி குஞ்சுமோன் அறிவித்துள்ளார்.

ஜென்டில்மேன் படம்

ஜென்டில்மேன் படம்

நடிகர் அர்ஜுன், மதுபாலா, சரண்ராஜ், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993ல் வெளியான படம் ஜென்டில்மேன். கேடி குஞ்சுமோன் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த படம்

ரசிகர்களை கவர்ந்த படம்

நன்கு படித்திருந்தும் வேலை கிடைக்காமல் ஏமாற்றத்திற்குள்ளாகும் நாயகன், முறைகேடாக சம்பாதித்து பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து அதை ஏழைகளிடம் கொடுப்பதாக இந்தப் படத்தின் கதை அமைந்திருந்தது. படத்தின் கொள்ளை சம்பவம் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

சிறப்பான அடித்தளம்

சிறப்பான அடித்தளம்

இந்தப் படம் அர்ஜுனுக்கும் நாயகி மதுபாலாவிற்கும் கோலிவுட்டில் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இருவரும் தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்தனர். தொடர்ந்து அர்ஜுன் முதல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் ஜென்டில்மேன் படம் காரணமாக அமைந்தது.

வெற்றிக்கு காரணமான இசைப்புயல்

வெற்றிக்கு காரணமான இசைப்புயல்

படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்தார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். அவரின் கைவண்ணத்தில் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் கவனம் பெற்றன. மேலும் பின்னணி இசையும் காட்சிக்கு தக்கபடி சிறப்பாக அமைந்திருந்தன. படம் வெளியான காலகட்டத்தில் இவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

பிரம்மாண்ட இயக்குநராக அறிமுகம்

பிரம்மாண்ட இயக்குநராக அறிமுகம்

இந்தப் படத்தின் மூலமாகவே இயக்குநர் ஷங்கர் தன்னை பிரம்மாண்டமான இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இரண்டு பிரம்மாண்டங்கள் இணைந்து ஜென்டில்மேன் படத்தை உருவாக்கி ரசிகர்களுக்கு சிறப்பான திரை அனுபவத்தை தந்தன. இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக அமைந்தது.

பிரம்மாண்ட தயாரிப்பாளர்

பிரம்மாண்ட தயாரிப்பாளர்

தொடர்ந்து ஷங்கர் கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநராக உருவெடுத்தார். அதேபோல கேடி குஞ்சுமோனும், பிரம்மாண்ட தயாரிப்பாளராகவே வலம் வந்தார். அவரது காதல் தேசம், காதலன், ரட்சகன் படங்கள் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்ட தயாரிப்புகளாக வெளிவந்தன.

கைகொடுக்காத ரட்சகன்

கைகொடுக்காத ரட்சகன்

நாகர்ஜுனா, சுஷ்மிதா சென் நடிப்பில் வெளியான ரட்சகன் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். தொடர்ந்து படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் ஜென்டில்மேன் 2 படம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு இறுதியில் குஞ்சுமோன் வெளியிட்டார்.

மீண்டும் பிரம்மாண்டம்

மீண்டும் பிரம்மாண்டம்

தமிழ் திரையுலகில் ராபின் ஹூட் டைப் கதைகளுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அதன் ஒரு வடிவமே ஜென்டில்மேன் படம். அந்த வகையில் தற்போது அந்தக் கதையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் குஞ்சுமோன். இதனிடையே ஜென்டில்மேன் படத்தைவிட இரண்டு மடங்கு பிரம்மாண்டத்துடன் ஜென்டில்மேன் 2 படம் உருவாகவுள்ளதாக குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

வசூல் வேட்டை நடத்திய ஜென்டில்மேன்

வசூல் வேட்டை நடத்திய ஜென்டில்மேன்

ஜென்டில்மேன் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய நிலையில், தற்போது ஜென்டில்மேன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீசாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். விரைவில் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் யார் போட்டி

இசையமைப்பாளர் யார் போட்டி

இதனிடையே ஜென்டில்மேன் 2 படத்தின் இசையமைப்பாளர் குறித்த யூகத்தை தெரிவிக்கும் 3 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் குஞ்சுமோன் அறிவித்துள்ளார். இதற்கென ஜி2மியூசிக்டைரக்டர் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பாளர்

பிரம்மாண்ட தயாரிப்பாளர்

எப்போதும் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் கேடி குஞ்சுமோன். அவரது ஜென்டில்மேன், காதல் தேசம், ரட்சகன் உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்திற்காகவே அறியப்பட்டவை. இந்நிலையில் தற்போது ஜென்டில்மேன் 2 படத்தை அறிவித்துள்ள அவர், இசையமைப்பாளர் குறித்த போட்டியையும் அறிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

யார் நாயகன்?

யார் நாயகன்?

இந்தப் படம் அர்ஜுனுக்கு ஏற்றத்தை கொடுத்த படம். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் யார் ஹீரோவாக நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஜென்டில்மேன் படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார் அர்ஜுன். அவர் அளவிற்கு தற்போது இரண்டாவது பாகத்திற்கு யார் உயிர் கொடுப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X