»   »  புலிக்குப் பிறந்த குட்டிப் புலி.. சிவகாசி மத்தாப்பூ... விஜய் கொடுத்த "புலி"ப் பட்டங்கள்!

புலிக்குப் பிறந்த குட்டிப் புலி.. சிவகாசி மத்தாப்பூ... விஜய் கொடுத்த "புலி"ப் பட்டங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை மகாபலிபுரம் அருகே செவ்வனே நடந்து முடிந்தது, இசைத்தட்டை விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் வெளியிட விஜயின் மனைவி சங்கீதா அதனைப் பெற்றுக் கொண்டார்.

எப்போதும் அமைதியுடன் இருக்கும் விஜய் வழக்கத்திற்கு மாறாக நேற்று மனந்திறந்து மைக்கைப் பிடித்து பேசினார், தனக்கும் தனது ரசிகர்களுக்கும் வாழ வைத்துத்தான் பழக்கம் என்று பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.


தொடர்ந்து படத்தில் உடன் நடித்த நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் பட்டங்களை வாரி வழங்கினார், யாராருக்கு என்னென்ன பட்டங்களை வழங்கினார் என்று பார்க்கலாம்.


2 பெண்புலிகள்

2 பெண்புலிகள்

விஜய் கதாநாயகிகளைப் பற்றிப்பேசும்போது" இந்தப்படத்தில் என்னோடு இரண்டு பெண்புலிகளும் நடித்திருக்கிறார்கள்.ஒன்று புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிருபித்துக் கொண்டிருக்கும் உலகநாயகன் கமல் மகள் ஸ்ருதிஹாசன். இன்னொன்று மும்பை நமக்கு வழங்கிய இன்னொரு குஷ்பு ஹன்சிகா" என்று கூறினார்.


நந்திதாவுக்கு நன்றி

நந்திதாவுக்கு நன்றி

"நந்திதாவின் கேரியரில் முக்கியமான இந்த நேரத்தில் ஒரு சின்ன வேடத்தில் புலி திரைப்படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் அதற்காக நந்திதாவிற்கு நன்றி" என்று கூறினார்.


ஸ்ரீதேவி - சிவகாசி மத்தாப்பூ

ஸ்ரீதேவி - சிவகாசி மத்தாப்பூ

நடிகை ஸ்ரீதேவி பற்றிக் கூறும்போது "இந்தப்படத்தில் முக்கியவேடத்தில் நடித்திருப்பவர், தமிழ்த்திரையிலகிலிருந்து மும்பைக்கும் சென்று கொடிநாட்டியிருக்கும் சிவகாசி மத்தாப்பூ ஸ்ரீதேவி" என்றார்.


சின்னதம்பி டூ அண்ணன் தம்பி

சின்னதம்பி டூ அண்ணன் தம்பி

நடிகர் பிரபுவைப் பற்றிக் கூறும்போது "சின்னதம்பியாக நடித்து இப்போது எல்லோரிடமும் அண்ணன்தம்பியாகப் பழகிக்கொண்டிருக்கும் பிரபு" என்று புகழ்ந்தார்.


கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப்

கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப்

நடிகர் சுதீப் பற்றிக் கூறும்போது " ஹீரோவா நடிக்கிறவங்க வில்லனா நடிக்க ஒத்துக்கமாட்டாங்க, ஆனால், கன்னடத்தில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் சுதீப் இந்தப்படத்தில் நெகட்டிவ்ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார்" என்று கூறினார்.


சதுரங்க வேட்டை - புலி வேட்டை

சதுரங்க வேட்டை - புலி வேட்டை

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை பற்றி பேசும்போது ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நட்ராஜ் பற்றி பின்வருமாறு புகழ்ந்தார் " ஹீரோவாக சதுரங்கவேட்டையாடிய ஒளிப்பதிவாளர் நட்டி, இந்தப்படத்தில் ஒளிப்பதிவில் புலிவேட்டையாடியிருக்கிறார்".


இன்னும் 2 ஹீரோக்கள்

இன்னும் 2 ஹீரோக்கள்

புலி படத்தில் மேலும் 2 ஹீரோக்கள் இருக்கிறார்கள் "இந்தப்படத்தில் மேலும் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள், அவர்கள் கிராபிக்ஸ் செய்த கமலக்கண்ணன் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் ஆகியோர்தாம்" என்று புகழ்ந்தார்.


புலி படத்தின் ஹீரோயினில் தொடங்கி இயக்குநர் சிம்புதேவன் , பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீதேவி பிரசாத் ஆகிய அனைவரையும், தனித்தனியாகப் புகழ்ந்து அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தச் செய்திருக்கிறார் விஜய்.English summary
Puli Audio Function - Vijay Speech Impressive to All.
Please Wait while comments are loading...