»   »  விஜய் ரசிகர்களுக்கு பலத்தைக் காட்ட சரியான வாய்ப்பு.. புலி பற்றி குஷ்பு

விஜய் ரசிகர்களுக்கு பலத்தைக் காட்ட சரியான வாய்ப்பு.. புலி பற்றி குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயின் நடிப்பில் உருவான புலி திரைப்படத்தின் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்திருக்கின்றன. தற்போது புலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

Select City
Buy Vettai Puli Tickets

விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் இவர்களுடன் இணைந்து 25 வருடங்களுக்குப் பின்பு ஸ்ரீதேவி நடித்திருக்கும் படம் புலி. ஆக்க்ஷன் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக புலியை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.


புலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர். அதில் இருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.


குஷ்பு

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ "புலி படம் வெளியானது மகிழ்ச்சியளிக்கிறது. வெளியீட்டிற்கு முன்பு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முடியாது எனினும், விஜயின் ரசிகர்கள் பலத்தை காட்ட இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்" என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.


தனுஷ்

"விஜய் சார் மற்றும் புலி படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நடிகர் தனுஷ் புலி படக்குழுவினரை வாழ்த்தி இருக்கிறார்.


முருகதாஸ்

இயக்குநர் முருகதாஸ் துப்பாக்கி பட பாணியில் "ஐ ஆம் வெயிட்டிங் புலி" என்று கூறியிருக்கிறார்.


ஜெயம் ரவி

"புலி படத்தின் ஒட்டுமொத்த குழுவினரையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. புலி பெரியளவில் வெளியாக வாழ்த்துகிறேன்" என்று நடிகர் ஜெயம் ரவி புலி படக்குழுவினரை வாழ்த்தி இருக்கிறார்.


சிவகார்த்திகேயன்

புலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற விஜய் சாருக்கும், புலி படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்தியிருக்கிறார்.


விஜய்

புலி படம் பிரச்சினைக்கு உள்ளான போது அவரது ரசிகர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்தும் வகையில் "புலியை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம், அமைதியாக இருங்கள்" என்று விஜய் முன்னதாக ட்வீட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Read more about: vijay, puli, விஜய், புலி
English summary
Vijay's "Puli" has hit the screens on Today. Celebrities Wishes and Twitter Links Attached here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil