ரசிகர்களை மறக்காத ரஜினி... உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரசிகைக்கு நம்பிக்கை!
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களால் தலைவர் என்று போற்றப்படுகிறார்.
அவர் தன்னுடைய ரசிகர்களிடம் தொடர்ந்து தொடர்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தன்னுடைய ரசிகையிடம் அவர் ஆன்லைன் மூலம் பேசியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவரது பிறந்தநாளான அன்றைய தினம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. தொடர்ந்து தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் அவரது மகள்கள் ட்விட்டரில் பகிர்ந்தனர். இந்தப் புகைப்படங்களும் பெருமளவில் வைரலானது.

அண்ணாத்த படம்
முன்னதாக அவரது அண்ணாத்த படம் ரிலீசாகி மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. ரிலீசுக்கு முன்னதான உடல்நலக்குறைவால் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போதும், அவரது உடல்நலன் சிறப்பாக தேற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

ரசிகர்களிடம் சிறப்பான உறவு
இவ்வாறு ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையே சிறப்பான உறவு தொடர்ந்து இருந்து வருகிறது. ரஜினியும் தனது ரசிகர்களிடம் அவ்வப்போது பேசி வருகிறார். உடல்நலக்குறைவு ஏற்பட்ட பல ரசிகர்களிடையே அவர் பேசி, அவர்களுக்கு நம்பிக்கையை அளித்து வருகிறார்.

ரசிகைக்கு நம்பிக்கை
இந்நிலையில் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெங்களூருவை சேர்ந்த தனது ரசிகைக்கு நம்பிக்கை அளித்து பேசியுள்ளார் ரஜினிகாந்த். அவருடன் வீடியோ காலில் பேசிய ரஜினி, தற்போது கொரோனா சூழலில் தன்னுடைய உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் அவரை நேரில் சந்திக்க முடியாது என்று கூறியுள்ளார்.
உடல்நலனுக்காக பிரார்த்தனை
ஆனால் அவருடைய உடல்நலனுக்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரஜினிக்காக ரசிகர்கள் உருகுவதும், ரஜினியும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











