Don't Miss!
- News
"முளைத்த முடிச்சு".. அந்த பேரே வரலியே.. டிடிவி தினகரன் யாரை சொல்றாரு.. அடடே.. ஓபிஎஸ்ஸூக்கு செம குஷி
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து.. பிஸ்மி ஆபிஸுக்கு சென்று விஜய்யை ஒருமையில் திட்டிய ரஜினி ரசிகர்கள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் யூடியூப் வீடியோவில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. புத்தாண்டு தினமான இன்று பிஸ்மியின் அலுவலகத்துக்கே சில ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் சென்று பிஸ்மியை கண்டித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளன.
அதில் நடிகர் விஜய்யை ஒருமையில் சில ரஜினி ரசிகர்கள் திட்டுவதை பார்த்த விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் நடிகர் ரஜினிகாந்த பற்றிய ட்ரோல் மீம்களையும் ஆபாச கமெண்ட்டுகளையும் போட்டு ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பற்ற வைத்த சூப்பர் ஸ்டார் தீ அன்று முதலே சமூக வலைதளங்களில் பற்றி எரிவது குறிப்பிடத்தக்கது.

நம்பர் ஒன் சர்ச்சை
நடிகர் விஜய் தான் வணிக ரீதியாக தற்போது தமிழ் சினிமாவில் முதலிடத்தில் உள்ளார் என்றும் அவர் தான் நம்பர் ஒன் அதற்கு அடுத்து தான் அஜித் குமார் என வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சண்டையை சோஷியல் மீடியாவில் உருவாக்கியது. மேலும், வாரிசு இசை வெளியீட்டு விழாவிலும் மீண்டும் விஜய்யை நம்பர் ஒன் என தில் ராஜு பேசியிருந்தார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த சரத்குமார்
இந்திய அளவிலேயே சூப்பர் ஸ்டார் என்றால் மற்ற மொழி நடிகர்களே அது ரஜினிகாந்த் தான் என சொல்லி வரும் நிலையில், நடிகர் சரத்குமார் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என அப்பவே சொல்லியிருந்தேன். இப்போ அவர் தான் சூப்பர் ஸ்டார் என பேசியது ரஜினி ரசிகர்களை நேரடியாகவே பாதித்தது.

முன்னாள் சூப்பர்ஸ்டார் பேச்சு
யூடியூபில் வலைப்பேச்சு என்கிற சேனலை நடத்தி வரும் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்திய வீடியோ ஒன்றில் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசுவதாக நினைத்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர்ஸ்டார் என்று சொன்னது ரஜினி ரசிகர்களை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. புத்தாண்டு தினம் எனக்கூட பாராமல் நேரடியாக பிஸ்மி அலுவலகத்திற்கே சென்று அவரை மிரட்டி விட்டனர்.
|
விஜய் என்ன பண்ணிட்டான்
முன்னாள் சூப்பர் ஸ்டார் என ரஜினிகாந்த் பற்றி பேசியதற்காக மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை வாபஸ் வாங்கு என எச்சரித்த ரஜினிகாந்த் ரசிகர்களில் சிலர் விஜய் என்ன பண்ணிட்டான்னு ரஜினிகாந்த் இடத்தில் அவனை வைக்கப் பாக்குற என நடிகர் விஜய்யை கண்டபடி ஒருமையில் திட்டி பேசியது விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

சோஷியல் மீடியாவில் சண்டை
விஜய் ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் சண்டை நடந்து வரும் நிலையில், இந்த வீடியோக்கள் டிரெண்டாகி மேலும், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல ஆகி விட்டது. விஜய் ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் பற்றிய கொச்சையான ட்ரோல் மீம்களை பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தவர் இடத்துக்கு
ரஜினிகாந்த் ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்தவர் பட்டத்துக்கும் அடுத்தவர் இடத்துக்கும் ஆசைப்படக் கூடாது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் ஒருவர் தான் என பதிவுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். நடிகர் விஜய்யே பழைய வீடியோக்களில் சூப்பர் ஸ்டார்னா தலைவர் தான் என சொல்லி உள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.