twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துடும்ன்னு சொன்னேன்... ஓடிவந்து உதவிய ரஜினி... கண்கலங்கிய போண்டா மணி

    |

    சென்னை: தமிழில் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி.

    மறைந்த நடிகர் விவேக், வடிவேலு உட்பட பல நடிகர்களுடன் போண்டா மணி நடித்து பிரபலமானவர்.
    இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த போண்டா மணி, பிரபலங்களிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

    இந்நிலையில், தனியார் யூடியூப் சேன்லுக்கு பேட்டியளித்துள்ள போண்டா மணி, அவருக்கு உதவிய பிரபலங்கள் பற்றி நெகிச்சியுடன் பேசியுள்ளார்.

    விஜய் 10 லட்சம் எல்லாம் கொடுக்கல.. வடிவேலு போன்ல கூட விசாரிக்கல.. போண்டா மணி வருத்தம்! விஜய் 10 லட்சம் எல்லாம் கொடுக்கல.. வடிவேலு போன்ல கூட விசாரிக்கல.. போண்டா மணி வருத்தம்!

     காமெடியில் போண்டா மணி

    காமெடியில் போண்டா மணி

    நகைச்சுவை நடிகர் போண்டா மணி விவேக், வடிவேலு இருவரின் காமெடிக் கூட்டணியிலும் நடித்துள்ளார். வடிவேலுவுடன் அவர் நடித்த ஒரு காமெடி சூப்பர் ஹிட் அடித்தது. குளத்தின் கரையில் இருக்கும் வடிவேலுவிடம், தண்ணீருக்கு அடியில் இருந்து வரும் போண்டா மணி. "அவன், உங்கிட்ட என்ன சொன்னான்னு கேப்பாங்க?, ஒன்னுமே சொல்லிறாதீய... அடிச்சுக் கூட கேப்பாய்ங்க... அப்பயும் ஒன்னும் சொல்லிறாதீய" என சொல்லிவிட்டு மாயமாகிவிடுவார். இந்தக் காமெடி சீன் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி பல காமெடி காட்சிகளில் நடித்து புகழ்பெற்றவர் போண்டா மணி.

     உதவிக் கேட்டு வீடியோ

    உதவிக் கேட்டு வீடியோ

    கே.பாக்யராஜ் இயக்கிய 'பவுனு பவுனுதான்' படத்தில் காமெடி நடிகராக அறிம்கமான போண்டா மணி, பின்னர் வடிவேலு, விவேக் இவர்கள் இருவரது கூட்டணியிலும் நடித்து மிகவும் பிரபலமானார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள போண்டாமணி, தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்உ சிறுநீரகங்களும் செயல்படாமல் போக, சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அவரை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

     உதவிய சூப்பர் ஸ்டார்

    உதவிய சூப்பர் ஸ்டார்

    அப்போது போண்டா ம்ணிக்கு சிறுநீரகம் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதற்கான செலவு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் செய்யப்படும். என அமைச்சர் கூறியிருந்தார். மேலும், நடிகர் பார்த்திபனும் போண்ட மணியின் அன்றாடத் தேவைக்கு வேண்டிய பண உதவியை அவருடைய மனிதநேய மன்றத்திலிருந்து செய்கிறேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள போண்டா மணி, தனது நிலையறிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனே உதவியதாகக் கூறியுள்ளார்.

     விஜய், அஜித்துக்கு விண்ணப்பம்

    விஜய், அஜித்துக்கு விண்ணப்பம்

    அதில், அஜித்தின் மேனேஜர் தன்னை தொடர்புகொண்டு கடிதம் கேட்டார். அதனை அஜித் சாரிடம் கொடுத்து மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி பெற்று தருவதாக கூறினார். அதேபோல், விஜய்யின் மேனேஜரும் என்னை தொடர்புகொண்டு பேசினார். எனது மருத்துவ செலவுக்கு 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. அரசு உதவி மூலம் செய்வதாக இருந்தால் 5 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் இந்த உதவியை எதிர்பார்த்திருந்தேன். இல்லையென்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்ற கவலையில் இருந்தேன். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்னிடம் போனில் பேசினார். மேலும், உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்த ரஜினி சார், மருத்துவ சிகிச்சையின் போது மேலும் பண உதவி செய்கிறேன் எனக் கூறினார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். போண்டா மணியின் இந்த பேட்டியை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Actor Bonda Mani entertained people with his comedy. Currently, both kidneys have failed and he was taken treated at Omanturar Multi Specialty Hospital. So he asked for help from Cine celebrities. In this case, Actor Rajinikanth provided one lakh rupees to Comedian Bonda Mani for his treatment
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X