»   »  தீபாவளிக்கு இல்லை... தள்ளிப் போனது ரஜினியின் 2.ஓ மெகா படம்!

தீபாவளிக்கு இல்லை... தள்ளிப் போனது ரஜினியின் 2.ஓ மெகா படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் மெகா படமான 2.ஓ வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது தள்ளிப்போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.


Rajinikanth's 2.O release postponed to 2018

இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில், ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக உள்ளார்.


ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி ரிலீசாக வெளியாக இருந்தது.


ஆனால் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளை உலகத் தரத்துக்கு செய்ய வேண்டியிருப்பதால் படத்தை தீபாவளிக்கு வெளியிடாமல், அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.


வரும் ஜனவரி 2018-ல் குடியரசு தினத்துக்கு ஒரு நாள் முன்பாக படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் தயாராவது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth's magnum opus 2.O release date has been postponed to 2018 January due to VFX works.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil