»   »  ரஜினி வில்லனுடன் இருக்கும் சிறுவன் இப்போ பெரிய ஹீரோ: யார்னு தெரியுதா?

ரஜினி வில்லனுடன் இருக்கும் சிறுவன் இப்போ பெரிய ஹீரோ: யார்னு தெரியுதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தான் குட்டிப் பையனாக இருக்கும்போது நடிகர் அக்ஷய் குமாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு பழைய நினைவுகளை அசைபோட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஆகியுள்ளார் ரன்வீர் சிங். ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி என தொடர் வெற்றிப் படங்களை அளித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பல விருதுகளை பெற்றுள்ளார்.

Ranveer Singh's fanboy moment with Akshay Kumar

இந்நிலையில் ரன்வீர் தான் சிறுவனாக இருந்தபோது நடிகர் அக்ஷய் குமாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரன்வீர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒன் அன்ட் ஒன்லி அக்ஷய்குமாருடன் என் ரசிகர் நேரம். ருஸ்தமுக்கு 9 நாட்கள் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அக்ஷய் குமார் கடற்படை அதிகாரியாக நடித்துள்ள ருஸ்தம் படம் வரும் 12ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார்.

English summary
Bollywood actor Ranveer Singh tweeted a picture of him with Akshay Kumar saying,"Fanboy moment with the one and only akshaykumar".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil