இளையராஜா அழைத்து போனேன்... இது ஒரு நல்ல சந்திப்பு... நெகிழ்ந்த கங்கை அமரன்
சென்னை : மனஸ்தாபம் காரணமாக நீண்ட நாட்களாக பிரிந்திருந்த இளையராஜா மற்றும் கங்கை அமரன் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
Recommended Video
இதுகுறித்து பிலிமிபீட்டிற்காக பேசிய கங்கை அமரன், இளையராஜா நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னை நேரில் அழைத்து பேசியதாக தெரிவித்துள்ளார்.
பிரிந்திருந்த அண்ணன் -தம்பி தற்போது ஒன்று சேர்ந்துள்ளதாகவும் இது ஒரு நல்ல சந்திப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிந்திருந்த இளையராஜா -கங்கை அமரன்
இளையராஜா மற்றும் கங்கை அமரன் இடையில் சின்ன ராமசாமி பெரியராமசாமி படத்தின் தயாரிப்பின்போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுமுதல் இருவரும் பேசிக் கொள்வதில்லை. எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் சந்தித்துக் கொண்டதும் இல்லை. இது நீண்ட காலங்களாக தொடர்கதையாக இருந்தது.

மீண்டும் இணைந்த அண்ணன் -தம்பி
இந்நிலையில் தற்போது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டுள்ளனர். இதன்மூலம் நீண்ட நாட்களாக இருந்த மனஸ்தாபம் முடிவுக்கு வந்துள்ளது. இளையராஜா தன்னை அழைத்து நேரில் சந்தித்துப் பேசியதாகவும் பழைய கதை குறித்து தான் பேச விரும்பவில்லை என்றும் மனஸ்தாபம் காரணமாக நீண்ட நாட்களாக பிரிந்திருந்த அண்ணன் மற்றும் தம்பி தற்போது மீண்டும் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பழைய கோபம் இல்லை
பிலிமிபீட்டிற்காக இதுகுறித்து பேசிய கங்கை அமரன், இந்த விஷயத்தில் தனக்கோ இளையராஜாவிற்கோ பழைய கோபம் எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இளையராஜா தன்னிடம் சந்தோஷமாக பேசியதாகவும் அவர் முகத்திலும் மாற்றங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நல்ல சந்திப்பு
இது ஒரு நல்ல சந்திப்பு என்றும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். கடந்த 13, 14 வருடங்களாக பிரிந்திருந்த தாங்கள், தற்போது இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் இணைந்துள்ளதாகவும் குடும்ப விஷயங்கள் குறித்து அதிகமாக பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாட்டெழுத சொன்னால் எழுதுவேன்
இளையராஜா வரும் காலங்களில் தன்னை பாட்டெழுதுமாறி கூறினால் கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்து தற்போது முகம் பார்த்து பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாவலர் பிரதர்ஸ் ரீ-யூனியன்
இவர்களின் சந்திப்பு குறித்து முன்னதாக பிரேம்ஜி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநரும் கங்கை அமரனின் மகனுமான வெங்கட் பிரபு இருவரும் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து பாவலர் பிரதர்ஸ் ரீயூனியன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











