»   »  'நடிகன்னா உனக்கு ஓட்டு போட்ருவாங்களா..?' - அதிர்வைக் கிளப்பும் 'ஆர்.கே நகர்' டீசர்!

'நடிகன்னா உனக்கு ஓட்டு போட்ருவாங்களா..?' - அதிர்வைக் கிளப்பும் 'ஆர்.கே நகர்' டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வெங்கட்பிரபு தயாரிப்பில் வைபவ், சம்பத், சனா அல்தாஃப், இனிகோ பிரபாகர் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'ஆர்.கே நகர்'. இந்தப் படத்தை சரவண ராஜன் என்பவர் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 'ஆர்.கே.நகர்' படத்தின் டீசரில் வழக்கமான வெங்கட்பிரபு டச் இருக்கிறது.

இந்த டீசரில் இடம்பெறும் வசனங்கள் கமல்ஹாசன், விஜய் ஆகியோரை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஆர்.கே.நகர் டீசர்

'ஆர்.கே.நகர்' படத்தில் சர்ச்சையைக் கிளப்பும் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் படத்திற்கு ப்ரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபுவின் அப்பா கங்கை அமரனும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்ருவாங்களா

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்ருவாங்களா

'நடிகன்னா உனக்கு ஓட்டு போட்ருவாங்களா..? எம்.ஜி.ஆரா நீ..?' என வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படத்தின் டீஸரில் வரும் வசனம் மறைமுகமாக நடிகர் கமல்ஹாசனை பெயர் குறிப்பிடாமல் கலாய்க்கும் விதத்தில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இது அரசியலில் ஆர்வமாக இருக்கும் விஜய் போன்ற நடிகர்களையும் குறிப்பிடுகிறது எனவும் கூறிவருகிறார்கள்.

பஞ்சாயத்து

இந்நிலையில் இதுபற்றி கயல் பட நடிகர் சந்திரன் ட்விட்டரில் வெங்கட் பிரபுவிடம் வாக்குவாதத்தில் இறங்கினார். 'உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை' என அவர் வெங்கட்பிரபுவிடம் தெரிவித்திருக்கிறார்.

சரிக்கட்டுறதுக்கு வாழ்த்தா

கமல்ஹாசனுக்கு வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதையும் விமர்சித்துள்ளார். 'ஒரு பக்கம் RK நகர் டீசர், அதை சரிக்கட்ட பிறந்தநாள் வாழ்த்தா?' என சந்திரன் கேட்டுள்ளார்.

English summary
'RK Nagar' movie teaser released officially. The fans are saying that the 'RK Nagar' teaser produced by Venkat prabhu will be made in the manner of teasing KamalHaasan and Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X